தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்...



சமீபத்தில், என் உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு, இறுதிவரை மணமக்களுடன் இருந்து, அனைத்து வேலைகளையும் செ#து கொடுக்கும் பொறுப்பில் கவனமாய் இருந்தேன். திருமண ஆல்பத்திற்காக போட்டோகிராபர், அடிக்கடி மணமக்களை பலவிதமான போஸ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி, பல விதங்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில், மணமக்கள் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு மணமக்கள் இருவரும் தயங்கினர். இருந்தாலும், 'இதெல்லாம் சகஜம். இப்போதெல்லாம் ஆல்பத்தில் முத்தக்காட்சிகள் இடம் பெறுவது பேஷனாகி விட்டது...' என்று, போட்டோகிராபர் கட்டாயப்படுத்தவே, மணமக்களும் இசைந்தனர். இதைக் கண்ட எனக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி.

என்னதான் நாகரிகம் என்றாலும், தாம்பத்யத்தின் அடிப்படை உணர்வான முத்தத்தை, பலர் முன்னிலையில் பரிமாறிக் கொள்வதும், அதை புகைப்படமாக எடுத்து, பதிவு செய்வதும், கலாசாரத்தை மீறிய செயல் அல்லவா? பின், யாராவது ஆல்பத்தை பார்க்க நேரிட்டால், மணமக்களை தவறாகவோ, உணர்ச்சிமயமாகவோ பார்க்க கூடும் அல்லவா? போட்டோகிராபர், வீடியோகிராபர் இப்படி போஸ் கொடுக்க வற்புறுத்தினாலும், நாம் மரபை மீறக்கூடாது.

அந்தரங்கம் புனிதமானது என்பதை, மணமக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

— ஆர்.மதன், மதுரை.

பத்து இலக்க எண்களை துரத்தினவன்!



நான் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி. அலுவலக பணி தொடர்பாக சென்னை வந்திருந்தேன். சென்னையில் இறங்கும் போது தான், என் மொபைல் போன் காணாமல் போனதை உணர்ந்தேன். என் மனைவி எண்ணோ, சென்னை நண்பர்கள் அலுவலக துணை அதிகாரிகள் எண்ணோ, எனக்கு மனப்பாடமாக தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட எண்கள், மொபைல் போன் புக்கில் உள்ளன. அன்று முழுவதும் முகத்தை தொலைத்து விட்டவன் போல பரிதவித்தேன்.

நண்பர்களின், துணை அதிகாரிகளின் மறைமுக கிண்டலுக்கு ஆளானேன். ஷெர்லாக்ஹோம்ஸ் போல் துப்பறிந்து, எட்டு மணி நேரத்திற்கு பின், மனைவி எண்ணை கண்டுபிடித்தேன். எட்டு மணி நேரம் தொடர்பு கொள்ளாததால், எனக்கு என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ என, என் குடும்பத்தினர் பதறியிருக்கின்றனர். ஊர் திரும்பியதும், இரண்டு வேலைகள் செய்தேன். போன்புக் எண்களை டைரியில் பிரதி எடுத்தேன். நெருக்கமான இருபது நபர்களின் எண்களை மனப்பாடம் செய்தேன். குறைந்த விலையில் இரண்டாவது மொபைல் போன் வாங்கி, முதல் மொபைல் போனில் பதிவு செய்த எண்களை பதிந்து, பீரோவில் பாதுகாப்பாய் வைத்தேன். என் அவஸ்தை உங்களுக்கு பாடமாய் இருக்கட்டும்.

— க.சபேசன், திருப்பூர்.

வாயால் திறக்காதே!



நான், எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி மாணவன். எனக்கு நெருக்கமான நண்பர்கள் நால்வர் உண்டு. நாங்கள், வாரம் ஒருமுறை பீர் மட்டும் குடிப்போம். என் நண்பர்களில் ஒருவன், பாட்டில்களை எடுத்து, மூடிகளை பற்களால் திறப்பான். மூடி, 'கிஸ்சக்' என்ற சப்தத்துடன் திறந்து கொள்ளும்.

'பாட்டிலை வாயால் திறக்காதே... உன் பல்லுக்கு ஆபத்து. அத்துடன் உன் எச்சில் பட்ட பீரை அருவருப்புடன் குடிக்க வேண்டியிருக்கிறது...' என்பேன். அவனை தவிர்க்கவே, ஓப்பனர் அல்லது நெயில் கட்டருடன் இணைந்த ஓப்பனரை, பார்ட்டிக்கு எடுத்து செல்வேன். 'கோழை, பத்தாம் பசலி...' என, நண்பர்கள் என்னை கிண்டல் செ#வர்.

ஒரு தடவை, ஓப்பனர் தவிர்த்து, பீர் பாட்டிலை திறக்க முயன்றான் நண்பன். 'கடக்' என்ற சப்தத்துடன், அவனது பக்கவாட்டு நான்கு மேல் வரிசை பற்கள், ரத்தத்துடன் தெறித்து விழுந்தன. 'மாவீரன்' இப்போது<, 'ஓட்டைப்பல் சிங்காரம்' ஆகிவிட்டான்.

ஆகவே, 'குடிமகன்'களே... வாய் தவிர்ப்பீர்; ஓப்பனர் உபயோகிப்பீர்!

— எம்.எம்.ராஜராஜன், தஞ்சாவூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us