தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளை புகைப்படம் எடுத்தால்...

என் நண்பரின் வீட்டில் அமர்ந்து, அவரோடு பேசிக் கொண்டிருந்த போது, கல்லூரி மாணவியான அவரின் மகள் அழுதபடி வந்தாள். பதறிய நண்பர், 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்.

அதற்கு நண்பரின் மகள், 'நான் சின்னப்புள்ளயில ஏழு வயசுல எடுத்த போட்டோ மாமா வீட்டுல இருக்குல்ல; அதுல, நான் ஜட்டி மட்டும் போட்டுருக்கிறதால மாமா பசங்க, என்னை அசிங்கமாக கிண்டல் செய்றாங்க; எனக்கு அவமானமாயிருக்கு. அந்த போட்டோவ வாங்கிட்டு வாங்கப்பா...' என சொல்லி, பெரிதாய் அழ ஆரம்பித்தாள். நண்பரும் உடனே போய் புகைப்படத்தை வாங்கி வந்து விட்டார்.

இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை, உங்கள் வீட்டிலும் ஏற்படலாம்.

எனவே, உங்கள் வீட்டு பிள்ளைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளின் சிறு வயது போட்டோக்களை, என்னதான் நெருங்கிய உறவினராயிருந்தாலும் கொடுக்காதீர்கள்; அது, பிற்காலத்தில் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

- ஆர்.ஜெயராமன், பொள்ளாச்சி.

மனைவியின் மனம் அறியுங்கள்!

என் கணவர், அரசுடமை வங்கி ஒன்றில் அதிகாரி; முற்போக்கு சிந்தனைவாதி என்று அவருக்கு நல்ல பெயர். நகரில் நடக்கும் சுய முன்னேற்ற பயிற்சி வகுப்பு, ஆன்மிக பயிற்சி வகுப்பு போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று முதல் ஆளாக பெயர் கொடுத்து விடுவார். அதே நேரத்தில், வீட்டில் அடைந்து கிடக்கும் என் மன உணர்வைப் பற்றி, கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்.

'நீயும் வாயேன்; ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்...' என்று ஒரு பேச்சுக்கு கூட, என்னிடம் சொன்னது இல்லை; ஒருநாள், 'என்னையும் கூட்டிட்டு போகக் கூடாதா...' என்று வாய் விட்டு கேட்டு விட்டேன்.

'வீட்டுக்குள் இருக்கும் பொம்பளைக்கு அதெல்லாம் எதுக்கு?' என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டார்; மனம் குறுகிப் போனேன்.

தாலி கட்டிய மனைவியின் மனசு அறிந்து மதிப்பளிக்கத் தெரியாத என் கணவரைப் போன்ற ஆண்கள், இந்த மாதிரி ஆன்மிகப் பயிற்சிக்கும், சுய முன்னேற்ற பயிற்சிக்கும் போய் என்னத்த கிழிக்கப் போகின்றனர். 'படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்...' என்ற கதை தான்!

- சந்திரா ராமநாதன், ராமநாதபுரம்.

படிப்பு முக்கியம்!

சமீபத்தில், நண்பரின் தந்தையின் இறுதி சடங்கிற்காக, கிராமத்திற்கு சென்றிருந்தேன். இறந்து போனவர் அந்த கிராமத்தில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், துக்கம் விசாரிக்க வந்திருந்தோர் தெருவெங்கும் நிரம்பியிருந்தனர்.

தாரை, தப்பட்டை, சங்கு ஊதுதல், பட்டாசு வெடித்தல் என, அந்த கிராமமே அமர்க்களப்பட்டது. திடீரென்று சரியாக காலை, 9:00 மணியளவில் மேளம் அடிப்பதும், பட்டாசு வெடிப்பதும் நிறுத்தப்பட்டு, சாவு வீடுள்ள தெருவில் நிசப்தம் நிலவியது. மறுபடியும் மதியம், 12:00 மணிக்கு மேல், வழக்கம் போல மேளச் சத்தமும், பட்டாசு வெடிப்பதும் காதைக் கிழித்தது; நண்பரிடம் விவரம் கேட்டேன்.

'பக்கத்தில அரசு ஆரம்ப பள்ளி இருக்கு; மாணவர்கள் படிப்புக்கு இடையூறு ஏற்படுறத தவிர்க்கத்தான் இந்த ஏற்பாட்டை செய்தேன்...' என்று விளக்கினார்.

துக்கமான நேரத்திலும், குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக் கூடாதே என்று யோசித்து செயல்பட்ட நண்பரை, பாராட்டினேன்.

— நீ. தமிழ்அமுதன், மதுரவாயல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us