தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெகா சீரியலால் வந்த வினை!

கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி, சென்ற வருடம் இந்தியா திரும்பினார் நண்பர் ஒருவர். திருமணமாகாத அவர், மூன்று ஆண்டு காலம் அந்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றினார். அவரின் தாயையும் உடன் அழைத்து சென்றிருந்தார்.  இந்தியா திரும்பிய சில மாதங்களிலேயே, அவரது வயதான தாயாருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு, பலமுறை விழுந்திருக்கிறார். சிறந்த மருத்துவமனை ஒன்றில், மருத்துவப் பரிசோதனை செய்தபின், அவருக்கு, 'ப்ளட் பிரஷர்' இருப்பது தெரிய வந்தது. அதற்காக பல மருத்துகளை சாப்பிட்டும், பெரிய மாறுதலோ, முன்னேற்றமோ இல்லை.

அதனால், அவரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம்  அழைத்துச் சென்றுள்ளார். ஒரு வார ஆலோசனையில், அந்த மனோதத்துவ நிபுணர் சொன்ன தீர்வு, தற்போது நல்ல பலனைத் தருவதாக என் நண்பர் தெரிவித்தார். அவரின் தாயார் இந்தியா வந்த பிறகு, பொழுதுபோக்குக்கு வேறு வழி இல்லாததால், பல மாதங்களாக, 'டிவி'யில் வரும் அனைத்து மெகா சீரியல்களையும் தவறாமல் பார்த்து வந்துள்ளார். அந்த மெகா தொடர்களில், பரபரப்புக்காகக் காட்டப்படும் பல காட்சிகளைப் பார்த்து, பார்த்து அக்கதாபாத்திரத்துக்காக கவலைப்பட்டதால், அவருக்கு பிளட் பிரஷர் ஏறிப் போயி ருக்கிறது. தற்போது, சில மாதங்களாக மெகா சீரியல்களைப் பார்ப்பதை தவிர்த்ததில், அவரது பிரஷர் வெகுவாகக் குறைந்து, உடல் நலம் தேறி வருகிறார். பல ஆண்டுகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த வரை, அங்கு தமிழ் சேனல்கள் தெரியாததால், அவற்றை பார்க்காமல் இருந்துள்ளார். இந்தியா வந்த பின், இந்த மெகா சீரியல்களைப் பார்த்ததால் வந்தது பிரச்னை. வயதானவர்கள் பொழுது போக்கு என்ற பெயரில், அனைத்து மெகா சீரியல்களை யும் பார்ப்பதை தவிர்க் கலாமே.

ரயில் திருடர்களிடமிருந்து தப்பிக்க...

பணி நிமித்தம் காரணமாக நானும், என் தோழியும் அடிக்கடி ரயிலில் தான் பயணம் செய்வோம். அப்படி பயணம் செய்யும் போதெல்லாம், தோழி மறக்காமல் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொள்வாள். ரயிலில் பயணம் முடிந்ததும், அதை, யாருக்காவது கொடுத்து விடுவாள். இதுபற்றி அவளிடம் கேட்டேன்... 'மயக்க பிஸ்கெட் கொடுத்து நம்மிடமுள்ள உடமைகளை அபகரிக்கும் திருடர்கள் ரயிலில் ஏராளம் பேர். பேச்சிலேயே மயக்கி, பிஸ்கெட்டை சாப்பிட வைத்து விடுவர். இப்படி ரயிலில் பயணிக்கும் போது யாரேனும் சக பயணி பிஸ்கெட் கொடுத்தால், நம்மிடமுள்ள பிஸ்கெட் பாக்கெட்டைக் காட்டி, மறுத்து விடலாம். அதனால்தான் இந்த ஐடியா...' என்று சொல்லி, வியக்க வைத்தாள் தோழி. 'மயக்க பிஸ்கெட் கொடுத்து, ரயில் பயணிகளிடம் கொள்ளை...' என அடிக்கடி செய்தி வருகிறது. அந்த வகையில், தோழியின் இந்த ஐடியா அவசியமானது தான். எல்லாரும் இதை பின்பற்றலாமே?

—  ஆர்.தஸ்மிலா, அறந்தாங்கி.

'கிரானைட்' தளம்    தேவையா?

சமீபத்தில், மதுரை, ஈரோடு, ராமநாதபுரம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு, ஆன்மிக பயணமாக, இருபது பேர் சென்றிருந்தோம். பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவில்கள் என்றாலும், புதிதாக திருப்பணி செய்து, பிரகாரங்களில், 'கிரானைட்' கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. லேசாக மழை பெய்து கொண்டிருந்ததால், 'கிரானைட்' கற்களில் மழைநீர் பட்டு, பிரகாரத்தை சுற்றி வரும் போது, ஒரு பெண் வழுக்கி விழுந்து அடிபட்டுக் கொண்டார்.  உடனே, நாங்கள் தூக்கிவிட்டு உதவி செய்தாலும், அவரால் நடக்க முடியவில்லை. பிறகு, ஒரு வார பயணத்தை குறைத்துக் கொண்டு வர வேண்டியதாயிற்று. வயதானவர்களும், குழந்தைகளும் அதிகம் வரக்கூடிய கோவில் போன்ற ஆன்மிக உறைவிடங்களுக்கு, 'கிரானைட்' கற்கள் தேவையா? கருங்கற்களாலான சொர சொரப்பான தரை பகுதிகளுடன் கட்டப்பட்ட மன்னர்கள் கால கோவில்கள், பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாமல் கட்டப்பட்டிருத்ததை அப்படியே பராமரித் திருக்கலாமே... இனியாவது, கோவில் பிரகாரங்களுக்கு, 'கிரானைட்' கற்களை தவிர்ப்பரா?

—  ஜி.நீலா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us