தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !


PUBLISHED ON : டிச 05, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாருக்குத் தண்டனை !

சமீபத்தில், என் நண்பனின் தங்கைக்கு திருமண ஏற்பாடு நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, மணப்பெண்ணைக் காணவில்லை என்று தேடினர். கடைசியில், அவள் யாரையோ காதலிப்பதாகவும், அவனுடன் ஓடி விட்டதாகவும் தகவல் கிடைக்கவே, நண்பனின் குடும்பத்தினர் அவமானத்தில் கூனிக் குறுகினர்.

இரு தரப்பு பெரியவர்களும் கூடிப் பேசி, ஓடிப் போன பெண்ணின் தங்கையை, மாப்பிள்ளைக்கு மணமுடித்து வைப்பது என முடிவு செய்த போது, அதிர்ந்து போனோம். காரணம், அவளுக்கு வயது பதினைந்து கூட இருக்காது; பிளஸ் ஒன் தான் படிக்கிறாள். குடும்ப கவுரவம், அது, இது என, ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தனரே தவிர, விஷயம் கேள்விப்பட்டு, அந்த சின்னப்பெண் தன் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பொசுங்கப் போகிற வேதனையில் குலுங்கி, குலுங்கி அழுவதை யாரும் பொருட்படுத்தவில்லை. அப்போது, மாப்பிள்ளை, தன் அப்பாவையும், பெண்ணின் அப்பாவையும் அழைத்து, 'இந்தக் கல்யாணம் நடக்க வேண்டாம். இவ சின்னப் பொண்ணு. அவ நல்லபடியா படிக்கட்டும். தயவு செஞ்சு எல்லா ஏற்பாட்டையும் இதோட நிறுத்திக்குங்க. உடனே மண்டபத்தை காலி பண்ணிடலாம்...' என்று சொல்லி, பெருந்தன்மையுடன் சிறு பெண்ணின் தலையை கோதிவிட்டு, 'பயப்படாதம்மா... உன் அக்கா செய்த தப்புக்கு, உன்னை நான் பழிவாங்க மாட்டேன்...' என, ஆறுதல் சொல்லியதை பார்க்கும்போது, கண்கள் கலங்கி விட்டது. மாப்பிள்ளை நல்ல மனிதர் என்பதால், அந்த சிறுமியின் கனவுகள் காப்பாற்றப்பட்டது. இல்லையென்றால்...  எனவே, காதலிப்பவர்கள், தைரியமாக வீட்டில் சொல்லி, பிரச்னையை நேருக்கு, நேர் சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு, கடைசி நேரத்தில் இப்படி கோழைத்தனமாக முடிவெடுப்பதால், எத்தனை பேர், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்; எவ்வளவு பணம் விரயமாகிறது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.        — எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

* உடையில் தேவை கண்ணியம் !

நாகர்கோவில் மணிமேடை அருகே ஒரு தாயும், மகளும் சென்று கொண்டி ருந்தனர். 15 வயது  தான் இருக்கும். முழங்கால் தொடும் பிரில் பாவாடை, முதுகும் முன்புறமும் தெரியும்படியான டாப்! மாடர்ன் கிராப். காதிலும், கழுத்திலும் சன்னமான நகைகள்.  எதிரே இரு வாலிபர்கள், அப்பெண்ணை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டு வந்தவாறு, 'சூப்பர் பிகர்... சூப்பர் டிரஸ். எனக்குத்தாண்டா மேட்சா இருப்பா. இப்ப நம்மோட வந்து சினிமாவுக்குக் கம்பெனி குடுத்தாள்ன்னா மஜாவா இருக்கும்ல?' என்றான் ஒருவன். சப்தமாக அவன் கூறியதை பலரும் கேட்டனர். அந்தப் பெண் கூசிக் குனிய, அவளின் தாய், காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள். இது தேவையா? அவள், தன் மகளுக்கு இயல்பான உடையை உடுத்த வைத்து, அழைத்துக் கொண்டு போனால் யாராவது விமர்சிப்பரா? உடையில் கண்ணியம் இல்லையென்றால், இப்படிப்பட்ட மோசமான விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதுதான். — ஆ.கல்யாணி, தோவாளை.

* பெண்களுக்கு முன்னுரிமை !

உறவினர் வீட்டுத் திரு மணம் ஒன்றுக்குச் சென்றிருந் தேன். சாப்பாட்டுப் பந்தி நடக் கும் இடத்தில், ஒரு அருமையான ஏற்பாட்டைச் செய்திருந்தார். பரிமாறிய அனைவருமே பெண் களாகவே இருந்தனர். திருமண வீட்டாரிடம், 'என்ன இப்படி... ஆண்களை சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டு, முழு வதும் பெண்களை வைத்தே சாப் பாட்டை பரிமாற வைத்து விட்டீர்களே...' எனக் கேட்ட போது, 'பெண்களென்றால் சிக்கனமாக எதையும் பரிமாறு வர். யார் எவ்வளவு சாப்பிடுவர் என்பதை பெண்கள் ஆளைப் பார்த்தே கண்டுபிடித்து விடுவர். இதனால், கூடுதலாக பலர் சாப்பிட முடிவதோடு, பெண் களும் கூச்சமின்றி சாப்பிடுவர். 'ஆண்கள் அப்படியில்லை. அள்ளி, அள்ளி வைத்து, இருப் பதை காலி செய்து விட்டு போவதில் தான் குறியாக இருப்பர். பலர் பந்தியில் பொறுமை காட்டுவது இல்லை. தேவையின்றி பிரச்னை வரலாம். 'அதனால் தான் சிக்கனம், பொறுமை, கனிவு இவற்றுக்கு உதாரணமான பெண்களை வைத்தே விருந்தை பரிமாறச் செய்தேன்!' என்றார். 'அட்டகாசம் சார்!' என அனைவருமே பாராட்டினர். அடுத்து நம்ம வீட்டுக் கல்யாணத் துலயும் இப்படி அசத்தலாமே... நண்பர்களே... செய்வோமா?

— என்.ஜெய்சங்கர், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us