தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாக்கெட்' மணி சம்பாதிக்கும் மாணவர்கள்!

சமீபத்தில், நண்பரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். விருந்து பரிமாறிய அத்தனை பேரும், மிடுக்கான உடையில், பள்ளி - கல்லூரி மாணவர்களை போல தோற்றமளித்தனர்.

அவர்களை பற்றி, நண்பரிடம் விசாரித்த போது, 'அவர்கள் அனைவரும், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி - கல்லூரி மாணவர்கள். படிக்கும் போதே, விடுமுறை நாட்களில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் வேலை செய்து, கணிசமாக சம்பாதிக்கின்றனர். வாங்கும் ஊதியத்தில், நல்ல உடை மற்றும் பாடப் புத்தகங்களை வாங்குவதுடன், மீதி பணத்தை வீட்டு செலவுக்கும் தருகின்றனர்...' என்றார்.

இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்து, அம்மாணவர்களை மனமார பாராட்டினேன்.

மாணவர்களே... உங்கள் பொன்னான நேரத்தை வீணாக செலவழிக்காமல், கவுரவம் பார்க்காமல் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு பணத்தை ஈட்டலாமே!

— எஸ்.ஏ.ஜெயவீரன், கோவை.

ஆசிரியரின் அணுகுமுறை!

தன் பள்ளிக்கு புதிதாக ஆசிரியர் ஒருவர் வந்துள்ளதாக கூறிய என் மகன், 'அவர் ரொம்ப நல்லவர்...' என்றான். 'எப்படி சொல்ற?' என்றதற்கு, 'எங்க வாத்தியார், சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் திட்ட மாட்டார். அதோட நாங்க, 'டாய்லெட்' போக அனுமதி கேட்டா, 'உங்களுக்கு கழிப்பறை செல்லத் தோன்றினால், என்னிடம் அனுமதி வாங்க தேவையில்ல. நீங்களாகவே எழுந்து, பின்புறமாக சுற்றி போகலாம். இதனால், வகுப்பில், பாடம் நடத்துவது பாதிக்காது; அதோடு, உங்கள் அவசரமும் தீரும்'ன்னு சொல்வார்.

'எப்பவாவது வகுப்புக்கு தாமதமா வந்தா, திட்டாம, 'லேட்டா வந்தா அமைதியாக உங்க இடத்திற்கு போய் அமர்ந்து, அடுத்து நடக்கும் பாடத்தை கவனிங்க'ன்னு சொல்வார். அதேபோன்று, 'உங்களுக்கு விடுப்பு வேணும்ன்னா எடுத்துக்கங்க; ஆனா, அதன் இழப்பிற்கு நீங்கள் தான் பொறுப்பு! என்னை ஏமாற்றுவதாக நினைத்து பொய் சொல்ல நினைக்காதீங்க; அது, உங்கள நீங்களே ஏமாற்றுறீங்கன்னு அர்த்தம். நீங்க என்னை ஏமாற்றினாக் கூட பரவாயில்ல; உங்க பெற்றோரை மட்டும் ஏமாற்றாதீங்க; அதுதான், மிகப் பெரிய தவறு...' என்று கூறுவார்...' என்றான்.

இத்தகைய ஆசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் முன்னுக்கு வந்து விடுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

— பி.ராஜேஸ்வரி, மதுரை.

நோயாளியை பார்க்க செல்லும் போது...

சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்திருக்கும் என்னை பார்க்க வந்திருந்த என் நண்பர், கேரட், பீன்ஸ், பீட்ரூட் மற்றும் தக்காளி என, காய்கறிகள் வாங்கி வந்திருந்தார்.

மற்றவர்கள் எல்லாம், ஹார்லிக்ஸ் மற்றும் பழங்கள் வாங்கி வர, இவர் மட்டும் வித்தியாசமாக காய்கறி வாங்கி வந்திருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்த என் மனைவியிடம், 'எல்லாரையும் மாதிரி, நானும் பழங்கள் வாங்கி வந்தால், உங்கள் வீட்டில் தேவையில்லாமல் குவிந்து கிடக்கும். எனவே, உங்களுக்கு அன்றாடம் அவசியப்படும் காய்கறிகளை வாங்கி வந்தேன்...' என்றார்.

உண்மையில், அது எங்களுக்கு மிக உபயோகமாக இருந்தது. இது வித்தியாசமான, நல்ல யோசனையாக இருப்பதால், நம் வாசகர்களும் கடைப்பிடிக்கலாமே!

— எ.எம்.முகமது ரிஸ்வான், நாகர்கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us