தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !

இது உங்கள் இடம் !


PUBLISHED ON : ஜன 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பெண்கள் நினைத்தால்...

குடிப்பழக்கம் உள்ளவன் என்பது தெரிந்தே, ஒருவனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாள் என் தோழி. 'அவனை திருத்திக் காட்டுகிறேன்...' என்று எங்களிடம் சபதம் செய்த போது, சிரிப்புதான் வந்தது.முதலிரவன்றே, 'உன் அழகில் மயங்கி தான் உன்னை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன். அதற்காக, நண்பர்களோடு சேர்ந்து, 'தண்ணி' அடிக்கறதுக்கு தடை போடாதே... வாரத்தில் மூன்று நாட்கள் என்னை ப்ரியா விட்டுடு...' என்று கூறியிருக்கிறார் தோழியின் கணவன். இவளும், 'பூம் பூம்' மாடு போல தலையை ஆட்டி, 'வாரத்தில் மூணு நாட்கள் என்ன... தினமுமே, 'தண்ணி' அடிங்க... குடித்தது போக மிச்சம், மீதி இருந்தால், வீட்டு செலவுக்கு பணம் தாங்க...' என்று பெருந்தன்மையாக கூறிவிடவே, எந்த உறுத்தலும் இல்லாமல், தினமும், நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வர ஆரம்பித்தான். ஒருநாள், திடீரென்று, அலுவலகம் விட்டவுடன், சரியான நேரத்துக்கு வீடு வந்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, காபி, டிபன் சாப்பிட்டு, வீட்டிலேயே முடங்கி இருக்கிறான். அதற்கடுத்த நாட்களிலும் இதுவே வழக்கமாகி விட, தோழி காரணம் கேட்டிருக்கிறாள். எந்த பதிலும் சொல்லாமல், மவுன சாமியாராக மாறிப் போனான். 'ஒரு மனைவியே, நண்பர்களுடன் சேர்ந்து, தாராளமா குடித்து, கூத்தடித்து விட்டு வரச் சொல்கிறாள் என்றால், அதில் ஏதோ விஷயம் இருக்கு. அவளுக்கு வேறு யாருடனாவது தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்...' என்று, உசுப்பேற்றி விட்டுள்ளனர் நண்பர்கள். தன் காதல் மனைவி, தன்னை விட்டு பிரிந்து போய் விடுவாளோ என்று பயந்த கணவன், குடிப்பதை விட்டு, ஒழுங்காக வீட்டிற்கு வந்து, மனைவியை தன் பார்வையிலேயே வைத்துள்ளான். அதிலிருந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி, இப்போது ஒழுங்காக தோழியுடன் குடும்பம் நடத்தி வருகிறான்.இப்படி ஒரு நெருப்பு பொறியை, கணவனின் மனதில், நண்பர்கள் மூலமாக விதைத்ததே என் தோழிதான் என்பது பின்னர் தெரிந்தது. தோழி ஏற்படுத்திய பொறி, கணவனது நண்பர்களும் குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதாக கேள்வி. பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்று, தோழியை பாராட்டி விட்டு வந்தேன்.

— ஆர்.ஜானகி, சென்னை.

* 'மேட்சிங் பிளவுஸ்' எடுக்கப் போறீங்களா?

அண்மையில், நானும், என் மனைவியும், ஐந்து புதுப் புடவைகளுடன், 'மேட்சிங் பிளவுஸ்' துணி எடுப்பதற்கு சென்றிருந்தோம். அந்த கடை ஊழியர் ஒருவர், ஆரம்பம் முதலே, எங்களை உற்று கவனித்தபடி இருந்தார். நாங்கள் எந்த செக்ஷனுக்குப் போனாலும், அவர் எங்கள் கூடவே வந்ததில், சங்கடமும், எரிச்சலுமாகி, வெறுத்துப் போய், துணி எடுக்காமலே வீட்டிற்கு வந்து விட்டோம். இவ்விஷயத்தை என் மனைவி, பக்கத்து வீட்டு பெண்ணிடம் கூறியபோது, அவர் சொன்ன அனுபவ, 'டிப்ஸ்' இது... 'மேட்சிங் பிளவுஸ் எடுக்க, புதுப் புடவைகளை ஜவுளிக் கடைக்கு கொண்டு போகும் போது, ஓரம் தைத்துத் தான் கொண்டு போக வேண்டும். சிலர், விலைச் சீட்டை எடுத்துவிட்டு, புடவையை களவாடுவதால், கடைக்காரர் இப்படித்தான் கண்காணிப்பார்...' என்றார். எனவே, வாசகர்களே... புதுப் புடவைகளுக்கு, 'மேட்சிங் பிளவுஸ்' எடுக்க ஜவுளிக் கடைக்கு செல்லும் போது, இனி, எங்களைப் போல் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாமல், புடவைகளை ஓரம் தைத்து எடுத்துச் செல்லுங்கள்!

— யா.தாமஸ், வெட்டூர்ணிமடம்.

* அரசு பள்ளிகள் கவனிக்குமா!

நான் ஒரு கல்லூரி மாணவி. சமீபத்தில், என் பள்ளித் தோழியை சந்தித்தேன். மிகவும் மெலிந்து நோயாளி போல் இருந்தாள். காரணம் கேட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது. சிறுநீரக பிரச்னையால் ஆபரேஷன் செய்துள்ளாள். முறையாக சிறுநீர் கழிக்காததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்கு அவள் கூறிய காரணம், சிந்திக்க வைத்தது.

என்னவென்றால், நாங்கள் படித்தது அரசுப் பள்ளியில். அங்கு இருந்த கழிவறை மிகவும் மோசமான, சொல்ல முடியாத நிலையிலிருக்கும். அதனால், பெரும்பாலான மாணவியர் கழிவறை பக்கம் செல்லவே மாட்டார்கள். கழிவறை தோற்றமும், நாற்றமும் குடலை புரட்டும். இதனால், என் தோழி சிறுநீர் கழிக்க வருவதில்லை. இதைப்போன்று நிறைய மாணவியர். இப்படிப்பட்ட காரணங்களால், அவள் சிறுநீரகப் பிரச்னைக்கு ஆளாகி, ஆபரேஷன் வரை சென்றுள்ளது. பல அரசுப் பள்ளிகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் மாணவியரின் நிலையை விவரிக்க முடியாது. இதை மாற்ற, நல்ல கழிப்பிட வசதிகளை, அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தி, அதைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே, அரசுப் பள்ளிகளில், ஸ்வீப்பர்களுக்கு என்று மாதா மாதம் ஒரு தொகை வசூலிக்கின்றனர். அதைக் கொண்டு கழிவறையை பராமரிப்பதோடு, பெண்களுக்கு நாப்கின் வாங்கி வைத்து, உபயோகிப் பவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் முறையை கொண்டு வந்தால், பள்ளி மாணவியரின் வருகை அதிகரிக்கும். இக்கடிதத்தை படிக்கும் அனைத்து ஆசிரியை களும், அதற்கான முயற்சியை எடுப்பரா? — சங்கரி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us