தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்வி!

எங்கள் அலுவலகத்தில் நடந்த நிகழ்வு இது...

என் அருகில் அமர்ந்திருந்த பெண் ஊழியர் ஒருவர், கழிப்பறை செல்வதற்காக, தன் இருக்கையில் இருந்து எழுந்தார். உடனே, அவர் அருகிலிருந்த ஆண் ஊழியர், 'என்னங்க மேடம்... மாசப் பிரச்னையா; 'பேடு'லாம், 'அலர்ட்டா' வெச்சிருக்கீங்களா...' எனக் கேட்டார்.

அடுத்த நொடி, வெகுண்டெழுந்த அப்பெண், 'நீ எல்லாம் படிச்ச மனுஷனாய்யா... ஒரு பெண் கிட்ட இப்படி நாகரிகமில்லாம கேட்கிறேயே... உன் அக்கா, தங்கச்சியும் வேலைக்கு போறவங்க தானே... இதே கேள்விய அவங்ககிட்ட, கூட வேலை பாக்குறவன் கேட்டா, நீ ஒப்புக்குவியா... இதோ பார்... வேலை செய்யத் தான் நீயும், நானும் வந்திருக்கோம்; இங்க வேலை சம்பந்தமான பேச்சுகளை மட்டும் தான் பேசணும். மற்றபடி, அனாவசியமா பேசின, மேனேஜர்கிட்ட சொல்லி, மானத்தை வாங்கிடுவேன்...' என, பொரிந்து தள்ள, 'கப்சிப்' ஆனான், ஆசாமி.

வேலைக்கு போகும் பெண்கள், வாய் மூடி மவுனியாக இல்லாமல், இதைப் போன்ற காமாந்த குணம் கொண்ட ஆண்களின் வாய்த்துடுக்கை அடக்கினால், பெண் எனும் தீயை நெருங்குவரா!

— கே.ஜெகதீசன், கோவை.

திருமண நிகழ்ச்சியின் போது...

சமீபத்தில், மதுரையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மண்டபத்தின் இரு புறங்களிலும் இருந்த, எல்.இ.டி., 'டிவி' திரையில், வரவேற்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். அதன் இடை இடையே, அவர்கள் சமுதாயத்தை சேர்ந்த திருமண வயதுள்ள ஆண், பெண்களின் புகைப்படத்துடன், அவர்களின் வயது, படிப்பு மற்றும் வேலை போன்ற விவரங்களை ஒளிபரப்பினர்.

வயது வந்த பிள்ளைகளை வைத்திருப்போர், அதை குறிப்பு எடுக்க, அச்சமயம், அவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு கையேட்டை, வினியோகம் செய்தனர், திருமண வீட்டினர். இதை, நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் அனைவரும் பாராட்டினர்.

தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று, தாங்கள் மட்டும் நிம்மதி, சந்தோஷம் அடையாமல், தங்கள் சொந்த பந்தங்களுடைய பிள்ளைகளுக்கும், விரைவில் திருமணம் நடைபெற, சிறு உதவியாக இருக்கட்டுமே என்று, திருமண வீட்டார் கூறியது, அவர்களை மனதார வாழ்த்த வைத்தது.

— வி.சிவபால கண்ணன், விழுப்புரம்.

இப்படியும் ஒரு மருமகன்!

கடந்த ஆண்டு, என் நண்பனுக்கு திருமணம் நடந்தது. அனைவரிடமும் கனிவாக பழகும் அவன், இரக்க குணம் உள்ளவன்; தன் மாமனார் - மாமியாரை, தன் பெற்றோரை போல் மதிப்பவன்.

தனியார் கம்பெனியில் வேலை செய்து, ஓய்வு பெற்றவர், அவனுடைய மாமனார். அவருக்கு, இவன் மனைவி மட்டுமே ஒரே பெண். இந்த வயதிலும், எங்கு சென்றாலும், சைக்கிளில் தான் செல்வார்.

இதைப் பார்த்த நண்பன், தன் கல்யாண நாளில், சர்ப்ரைசாக, அவருக்கு, 'டிவி.எஸ். - 50' வண்டியை வாங்கி, பரிசாக கொடுத்தான்.

மருமகன் தந்த பரிசால் மாமனார்-மாமியார் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தனர்.

பெற்ற தாய், தந்தைக்கே எந்த உதவியையும் செய்யாத இந்தக் காலத்தில், தன் மாமனாருக்கு உதவி செய்து, அவரை சந்தோஷப்படுத்திய என் நண்பனை, தெருவாசிகள் அனைவரும் பாராட்டினர்.

— சி. காளி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us