தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 26, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படியா இன்டர்வியூ நடத்துவது?

சமீபத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில், வேலைக்காக என்னை இன்டர்வியூ செய்தார் பெண் நிர்வாகி ஒருவர். அவர் கேட்ட கேள்விகள், என்னை முகம் சுளிக்க வைத்தது. 'உனக்கு பாய் பிரண்ட் உண்டா?' என்பது தான் அவரின் முதல் கேள்வி. 'இல்லை' என்றதும், 'எந்த பையனையாவது காதலிக் கிறாயா?' என்றதுடன், 'டேட்டிங் பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். 'என்ன மேடம்... தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட் கறீங்க?' என்று, எரிச்சலாய் கேட்டேன்.

'இப்போதெல்லாம் உங்களைப் போன்ற இளசுகள், பாய் பிரண்ட், காதலன், டேட்டிங்ன்னுதானே அலையுறாங்க... கொடுத்த பணியை சரியா செய்யறதே இல்லை; அதான் கேட்டேன்...' என்று, பொத்தாம் பொதுவாக சொன்னது, வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றியது போல் இருந்தது. அவர் சொல்வது போல் சிலர் இருக்கலாம்; ஆனால், என்னைப் போன்ற பல பெண் கள், குடும்பத்தின் பொருளா தார சுமையை பகிர்ந்து கொள்ளும் பொறுப்புடனே தான் வேலை தேடி அலை கிறோம். எனவே, இன்டர்வியூ என்ற பெயரில், இப்படி உணர்வுகளை உரசிப் பார்க்கும் கேள்விகளை தவிர்க்க பாருங்களேன்!

— இ.தஸ்பிஹா அப்சரா, கீரமங்கலம்.

பெண்ணிடம் சம்மதம் கேளுங்கள்!

என் நண்பரின் மகளை பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர். பெண் பார்க்கும் சம்பிரதாயம் முடிந்த பின், பெண் வீட்டார், 'மணமகனுக்கு, பெண்ணை பிடித்துள்ளதா?' என்று கேட்டனர். உடனே மணமகன் வீட்டாரோ, 'முதலில் பெண்ணின் சம்மதத்தை கேளுங்கள்; அவளுக்கு சம்மதம் என்றால், எங்களுக்கும் சம்மதம்...' என்று பதில் அளித்தனர். இது பற்றி, மணமகன் வீட்டாரிடம் விசாரித்த போது, அவர்கள் கூறிய பதில், அதிர்ச்சி அளித்தது.

'தற்போது, பெரும்பாலான பெண்கள், திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் ஓடி விடுகின்றனர்; இன்னும் சிலருக்கு, திருமணத்திற்கு பிறகு விவாகரத்து ஆகிறது. அப்படி ஒரு அவமானம், எங்களுக்கு பிற்காலத்தில் வரக் கூடாது என்பதற் காகவே, சம்மதம் கேட்கிறோம்...' என்று கூறினர். இதுவும் சரியாகத் தான் பட்டது. பெண் பார்க்க செல்வோர் அனைவரும், இதை பின்பற்றலாமே!

— செந்தில், மதுரை.

ஏ.டி.எம்., மில் பணம் எடுக்கப் போறீர்களா?

நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்., சேவையைப் பெருக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்மகிழ்ச்சியை சீர் குலைக்கும் சில சங்கடங்களும் உள்ளது உண்மையே. இன்றுள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.,களில், செக்யூரிட்டி இருப்பதில்லை. திடீரென மின்சாரம் தடைபட்டால், ஏ.டி.எம்., தடையில்லாமல் இயங்க, யு.பி.எஸ்., வசதியும் இல்லை.

அண்மையில், எங்கள் ஊருக்கு ரயிலில் வந்திறங்கிய நண்பர், ஸ்டேஷனிலுள்ள, ஏ.டி.எம்.,மில், பத்தாயிரம் ரூபாய் பணம் எடுக்க முயன்றார். பணம், மிஷினிலிருந்து வெளிவரும் சமயத்தில், திடீரென மின்சாரம் தடைபட்டது. விவரத்தைச் சொல்ல, அந்த ஏ.டி.எம்.,மில் செக்யூரிட்டி இல்லை.

சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு பேசிய போது, 'உங்கள் கணக்கில், பத்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது...' என்று கூறினர். நண்பருக்கு பதட்டத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ஏ.டி.எம்., மிஷின் அருகே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். மூன்று மணி நேரம் சென்று மின்சாரம் வந்ததும், பத்தாயிரம் ரூபாயை, மிஷின் வெளியே தள்ளியது. அதை எடுத்த பிறகுதான் அவருக்கு நிம்மதியே வந்தது.

அன்று, எங்கள் ஊரிலேயே அவர் தங்க வேண்டியிருந்ததால், அந்தப் பணம் அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து, அவர் அதே ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தால், பணம் அல்லது பயணம் இரண்டில் ஏதாவது ஒன்றை இழக்க நேரிட்டிருக்கும். புற்றீசல் போல், ஏ.டி.எம்., வைக்கும் வங்கிகள், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளரின் நலனைக் காக்க வேண்டும்.

— பி.அப்பன், ஆர்.பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us