sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 04, 2011

Google News

PUBLISHED ON : செப் 04, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழின் பெருமை!

தமிழாசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன். அங்கு அவர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஆங்கிலேயர் ஒருவருக்கு, தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார். அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆங்கிலேயரை, ஆச்சரியமாகப் பார்த்தேன். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...' என்று, கணீர் குரலில் அவர் சொல்லிய போது சிலிர்த்தேன்.

'நீங்கள் தமிழர்தானே?' என, என்னை அந்த ஆங்கிலேயர் வினவினார்; தலையாட்டினேன். 'தமிழின் சிறப்புக்களில் ஏதாவது ஒன்றைக் கூற முடியுமா?' என்று கேட்டார்; உதட்டை பிதுக்கினேன்.

'தமிழரசன், தமிழரசி, செந்தமிழன், இன்பத்தமிழன், தமிழன் என்பது போன்று, உங்கள் மொழியை முன்னிறுத்தி ஏராளமான பெயர்கள் உள்ளன. ஆனால் அதுபோல, தெலுங்கரசன், இன்பக்கன்னடன், மலையாளராணி, மராட்டிராசன், இந்திராசன் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்திராணி என்று ஒரு பெயர் உள்ளது. ஆனால் அது, தேவேந்திரனின் மனைவியைக் குறிப்பிடும் பெயரேயன்றி, இந்தி மொழிக்கும், அப்பெயருக்கும் சம்பந்தம் கிடையாது. புரிகிறதா தமிழின் பெருமை...' என்று கூறி, என்னை திகைக்க வைத்தார்.

என்ன செய்ய?

நம் தாய் மொழியின் பெருமையைக் கூட, ஒரு ஆங்கிலேயர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

— ஆர்.பிறைசூடன், பெரம்பூர்.

பி.கு: மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, தொல்காப்பியன், குறளரசன் போன்று நம் மொழியின் இலக்கியங்கள் கூட பெயராக வைக்கப்படுகின்றன பிரதர்!

— பொறுப்பாசிரியர்.

பண்பாடு இல்லாத அர்ச்சகர்!

புறநகர் பகுதியிலுள்ள, பிரபலமான ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். கோவில் வளாகத்திலேயே அமைந்திருந்த கடையிலிருந்து, அம்மனுக்குச் சாத்துவதற்காக, பூமாலை ஒன்றும், அர்ச்சனைத் தட்டு ஒன்றும் வாங்கி, கோவிலுக்குள் நுழைந்தோம்.

தட்டையும், பூமாலையையும் கையில் வாங்கிய அர்ச்சகர், பூமாலையைப் பார்த்ததும் முகம் சுளித்தார்; கண் சிவந்தார். 'என்ன மாலை வாங்கீண்டு வந்திருக்கேள்? இந்த மாலையை அம்மனுக்கு சாத்த மாட்டா. போய் வேற மாலை வாங்கீண்டு வாங்கோ...' என்று, அந்த மாலையைத் தூக்கி எறிந்தார். அவரது செயல் அருவருப்பாகவும், மிகுந்த மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

அம்மனுக்குச் சாத்த முடியாத மாலையை, கோவில் வாசலில் விற்க, ஏன் அனுமதிக்க வேண்டும்? மாலை கட்டி விற்பவர்களிடமே அதைச் சொல்லி, அந்தப் பூவை மாலை கட்டி விற்காமல் தடுத்திருக்கலாம். அதைவிடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், வெறுப்பை வெளிக் காட்டலாமா?

அவர், அம்மனுக்கு ஆகாது என்று சொன்ன பூவைக் கொண்டுதான், ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலுள்ள கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

குறைகள் தீரும்; சுமைகள் குறையும் என்றுதான், கோவிலுக்குச் செல்கிறோம். அந்தக் கோவிலுக்குள்ளேயே இதுபோன்ற கோளாறான, குறைபாடுள்ள, பண்பாடு இல்லாத அர்ச்சகர்கள் இருந்தால், எங்கே போய் முட்டிக் கொள்வது?

— ஜெயா அய்யர், சென்னை.

நூதன முறை லஞ்சம்!

வாரிசு சான்றிதழ் பெற, உரிய அலுவலகத்தில் மனு செய்தேன். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், 'நீங்கள் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்...' என்று சொல்லி, என் பெயரை துண்டு சீட்டில் குறித்தார். அதன் மறுபக்கத்தில் ஒரு மொபைல் நம்பரை குறித்து, என்னிடம் கொடுத்து, 'அந்த எதிர் கடையில், இந்த நம்பருக்கு, 301 ரூபாய்க்கு, 'டாப் - அப்' செய்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் வாரிசு சான்றிதழ் வேலை, கனகச்சிதமாக முடிந்து விடும்...'என்றார்.

ஒரு காலத்தில், லஞ்சத்தை பணமாக, நேரடியாக வாங்கி பழக்கப்பட்டவர்கள், இப்போது புதிய யுக்தியாக லஞ்சத்தை, 'டாப்-அப்' மூலம் பெறுவது, அவர்கள் பாதுகாப்பிற்காக என்பதை புரிந்து கொண்டேன்; அவர் சொன்னபடியே செய்தேன்.

இப்போதெல்லாம், லஞ்சத்தை பணமாக பெறுவது, கவுரவ குறைச்சலாக உள்ளது. அதனால், தன் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பருக்கு, டாப்-அப், பூஸ்டர் கார்டு, ரேட் - கட்டர் கார்டுக்கு பணம் செலுத்த சொல்வது, வெளிமாவட்டத்தில் இருக்கும் தன் வங்கி கணக்கில், பணம் போட சொல்வது போன்ற, நூதன வழியை கண்டுபிடிக்கின்றனர். இந்த வழியில் லஞ்சம் பெறுவது வாடிக்கையாகி விட்டது என்பது விசாரித்து பார்த்ததில் தெரிய வந்தது. கேட்க, கேட்க எனக்கு தலைசுற்றியது.

— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.






      Dinamalar
      Follow us