sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சுகம் தரும் செவ்வாய்!

/

சுகம் தரும் செவ்வாய்!

சுகம் தரும் செவ்வாய்!

சுகம் தரும் செவ்வாய்!


PUBLISHED ON : ஏப் 07, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்., 9 கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி

திதிகள் 15. முதல் திதி பிரதமை. பிரதமை என்றால் முதலிடம் வகிப்பது. ஒரு நாட்டின் முதல்வரை, 'பிரதமர்' என்று சொல்வது இதனால் தான். அடுத்தது துவிதியை. 'துவி' என்றால், இரண்டு. 'டூ' என்ற ஆங்கிலச்சொல் கூட, இதிலிருந்து பிறந்தது தான். திரிதியை என்றால், மூன்று. இதில், திரி என்ற சொல் இருக்கிறது. அடுத்த திதியான சதுர்த்தியில், சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர். அடுத்து பஞ்சமி; பாஞ்ச் என்றால், ஐந்து.சஷ்டி என்றால், ஆறு. முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறு முகம் இருக்கிறது. சப்தமியில் வரும் சப்தம் என்றால், ஏழு. கோவில்களில் ஏழு அம்பிகைகளைக் கொண்ட, சப்த கன்னியர் சன்னிதி இருக்கும். அஷ்டமி என்றால், எட்டு. துர்க்கைக்கு எட்டு கை. அஷ்ட புஜ துர்க்கை என்பர். நவமி ஒன்பதாம் திதி. நவரத்தினம், நவக்கிரகம் எல்லாமே ஒன்பது தான். தசமியில் உள்ள, தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். பத்து தலை உடையவன் என பொருள்.ஏகாதசி என்பதை, ஏகம் - தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11ம் திதி. இதுபோல துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பதையும் பிரித்து பொருள் பார்த்தால், 12,13,14 என வரும். பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15ம் திதியாகும்.இவற்றில், தேய்பிறை சதுர்த்தசி திதி செவ்வாய்க்கிழமை சேர்ந்து வருமானால், அது கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி எனப்படும். கிருஷ்ண என்றால், தேய்பிறை. அங்காரகன் என்றால், செவ்வாய்.சில குடும்பங்களில் கொடிய பாவம் இருக்கும். இது வழிவழியாக வந்து நம்மை கஷ்டப்படுத்தும். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு தலைமுறையில் இருந்த தாத்தா, தன் மனைவி, பிள்ளைகளை கைவிட்டிருப்பார். சிலர், கொலையே கூட செய்திருக்கலாம். சிலர், பெண்களை ஏமாற்றி கைவிட்டிருக்கலாம். கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் கையாடியிருக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம், எத்தனை தலைமுறையானாலும் தொடரும். அந்த குடும்பங்களிலுள்ள பெண்கள், கணவனை இழப்பதும், கைவிடப்படுவதும், ஆண்களால் ஏமாற்றப்படுவதும், அகால மரணம் அடைவதுமான சம்பவங்கள் தொடரும்.இவர்களின் பரம்பரை, வறுமையில் வாடும். ஒருவேளை, பணமிருந்தாலும் நிம்மதியின்றி வாழ்வர். இந்த தலைமுறை மட்டுமின்றி, எதிர்கால பரம்பரைக்கும் இந்த சாபம் தொடரும்.இது மட்டுமல்ல... சில குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும். அந்த ஆத்மாக்கள் அமைதியின்றி அலையும்.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் நாளே, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. இந்நாளில், பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும். இதற்கென்று சில ஹோமங்கள் உள்ளன. அவற்றை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது.ஐப்பசியில் வரும் தேய்பிறை சதுர்த்தசியை, 'நரக சதுர்த்தசி' என்கிறோம். அன்று தான் தீபாவளி கொண்டாட்டம். அதாவது, பாவம் மட்டுமே செய்து வாழ்ந்த ஒரு அசுரன், கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். இதிலிருந்து சதுர்த்தசி, பாவங்களை அழிக்கும் திதி என்பது உறுதியாகிறது. அது, செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வந்து, அந்நாளில் இறை வழிபாட்டை மேற்கொள்வோமானால், ஒரு தலைமுறையின் பாவத்தையே அழித்து, எதிர்கால தலைமுறையை சுகமாக வாழ வைக்கிறது. இந்நாளில், அவரவர் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும். புண்ணியத் தலங்களான காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு சென்று புனித நீராடி, முந்தைய பாவங்கள் தீர, கடவுளை பிரார்த்தித்து வர வேண்டும்.பொதுவாக, மக்கள் செவ்வாய்கிழமையை ஒதுக்கித் தள்ளுவதுண்டு. ஆனால், அந்த கிழமை ஒரு தலைமுறையின் பாவத்தையே அழிக்கிறது என்றால், அதை சுபநாளாகத்தானே கொள்ள வேண்டும்! ***

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us