PUBLISHED ON : மார் 18, 2012

கரீபியன் கடலில் அமைந்துள்ள ஜமைக்கா தீவில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஆடம்பர சொகுசு விடுதிகள் பல உள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வர். அதிலும், தேனிலவு தம்பதிகள் அதிகமாக வருவர்.
இங்குள்ள பிரபலமான சொகுசு விடுதி ஒன்று, சமீபத்தில் வித்தியாசமான ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. 'இயற்கையை நேசிக் கும் காதலர்கள், இயற் கையான முறையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்தால், உடனே எங்களுக்கு விண்ணப் பிக்கவும்...' என, அதில் தெரிவிக்கப்பட்டு இருந் தது. (இவர்களின் பாஷையில், இயற்கை முறை திருமணம் என்றால், ஆடையின்றி திருமணம் செய்து கொள்வது.) இந்த விளம்பரத்தை பார்த்தவுடன், <ஆயிரக்கணக்கான காதலர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களில் இருந்து பத்து ஜோடி மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், ஜமைக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். இதில், மூன்று ஜோடிகள் மட்டும், வேறு சில காரணங்களால் வரவில்லை. மற்றவர்கள் வந்திருந்தனர். கடந்த காதலர் தினத்தன்று, ஜமைக்கா கடற்கரையில், இவர்களின் திருமணம், இயற்கை முறையில் கோலாகலமாக நடந்தது.
நான்கு நாட்கள் சொகுசு விடுதியில் தங்குவது உட்பட, அனைத்து செலவுகளையும், சம்பந்தபட்ட சொகுசு விடுதி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. ஆட்டம், பாட்டம் என, நான்கு நாட்களையும், இவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
— ஜோல்னா பையன்.
