
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழியை நிஜமாக்கி காட்டியுள்ளார், சீனாவைச் சேர்ந்த, பெங் குயிகென் என்ற தொழில் அதிபர். செஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் இவர், தன், நான்கு மாடி வீட்டின், மொட்டை மாடியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். மொட்டை மாடியின் தரை முழுவதும், மணல் பரப்பி, நெல் மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறார். அவர் கூறுகையில்,'எத்தனையோ தொழில் செய்தாலும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாட்களாக இருந்தது. அதை, என் வீட்டிலேயே செய்து பார்த்தேன். வழக்கமாக, வயல்களில் விவசாயம் செய்யும்போது, மண் அரிப்பு போன்ற பிரச்னை இருக்கும். ஆனால், இந்த மாடி விவசாயத்தில், அந்த பிரச்னை இல்லை. தண்ணீரும், அதிகமாக தேவைப்படாது; நல்ல லாபம் கிடைக்கிறது. ஜப்பானில், கடலுக்குள்ளேயே விவசாயம் செய்கின்றனர். அதை ஒப்பிடும்போது, இதெல்லாம், சர்வ சாதாரணம்...' என்கிறார்.
— ஜோல்னா பையன்.

