
காதலர் தின அடையாளம்:
காதலர் தினத்தின் அடையாளம் வில், அம்புடன் கூடிய குழந்தை. அதன் பெயர், 'கியூபிட்!'
* காதல் தியாகம் நிறைந்தது. அதனால், காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.
* காதலர் தினத்தைக் குறிக்கும், வாலன்டைன் என்ற பெயரிலும், லவ்லேண்ட் என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.***
காதலர் தின பரிசு
வேல்ஸ் நாட்டில், மரத்தாலான, 'காதல் கரண்டி' சிற்பம் குறிப்பிடத்தக்கது. அதில் பூட்டும், சாவியும் செதுக்கப்பட்டிருக்கும். 'நீ என் இதயத்தைத் திறந்து விட்டாய்...' என்று அதற்குப் பொருள். சில நாடுகளில், கைக்குட்டை பரிசளிக்கப்படுகிறது; சிலர் காதல் பரிசாக மலர்க்கொத்து வழங்குவர். ***
பெரிய காதல் பரிசு
காதலர் தினத்தில், டில்லியில் ஒருவர், தன் காதலிக்கு பரிசாக மலர் கொத்து அனுப்பினார். அதன் மதிப்பு, 45 ஆயிரம் ரூபாய். இது, 14 அடி உயரத்தில், 14 இதய வடிவங்களுடன், ஆயிரத்து 400 சிவப்பு ரோஜாக்களும், 200 மஞ்சள் ரோஜாக்களும் கலந்து தயாரித்தது.***
முதல் காதலர் தின அட்டை!
இங்கிலாந்தில், 1415ல், 'டியூக் ஆப் ஆர்லீன்ஸ்' மன்னர், பிரான்ஸ் நாட்டிலிருந்த தன் மனைவிக்கு, தானே வாழ்த்து அட்டையைத் தயார் செய்து, அதில், ஒரு காதல் கவிதையை எழுதி அனுப்பினார். இதுதான் முதல் காதலர் தின வாழ்த்து அட்டை. ***

