sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 08, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரி —

நான், 57 வயது பெண். கணவர் வயது : 65. நகைக்கடை வைத்துள்ளார். எங்களுக்கு இரு மகன்கள். இருவரும் நன்கு படித்து, வங்கி பணியில் இருக்கின்றனர். என் பெரிய மகனுக்கு, 32 வயதில் திருமணம் செய்ய, திருவனந்தபுரத்தில் ஒரு பெண் பார்த்தோம். அந்த பெண், மகனைவிட நிறைய படித்தவள். அவள் வீட்டிற்கு ஒரே பெண்.

என் கணவர் குடும்பத்தாருக்கு, அந்த பெண்ணை பிடிக்கவில்லை. 'கேரள பெண் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டாள்...' என, எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், என் மகனுக்கு பிடித்திருந்ததால், அவளை திருமணம் செய்து வைத்தோம்.

திருமணமாகி, ஐந்து மாதம் சென்ற பிறகு வேலைக்கு செல்ல வேண்டும் என்றாள், மருமகள். ஒரு குழந்தை பிறந்த பின் வேலைக்கு செல்லலாம் என, அவளை வேலைக்கு அனுப்பவில்லை, என் மகன். அந்த கோபத்தில் சின்ன சின்ன பிரச்னை வர, மகனையும், மருமகளையும் தனி குடித்தனம் வைத்தோம்.

மூன்று மாதத்தில் முதல் குழந்தை உண்டாக, அவள் அம்மாவை வர சொல்லி, அவருடன் போய் விட்டாள். அங்கு போய், 'எனக்கு இப்போது குழந்தை வேண்டாம்...' என, கருவை கலைத்து விட்டாள். எங்களையும், என் மகன் பேச்சையும் மதிக்கமாட்டாள். கரு கலைக்க அவளுடைய பெற்றோர் உடந்தையாக இருந்தனர்.

ஆறு மாதம் கடந்ததும், எங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தாள். மூன்று மாதத்தில் இரண்டாவது முறை கர்ப்பமானாள். 40 நாளில் அவள் வீட்டிற்கு போய் விட்டாள். தன்னை பார்க்க வரக்கூடாது என, எங்களிடம் கூறிவிட்டு சென்றாள். என் மகன் மட்டும், அவளைப் போய் பார்த்துவிட்டு, பணம் கொடுத்துவிட்டு வருவான்.

ஏழு மாதம் சென்ற பின், மருமகளை காண, எங்களை கூட்டிச் சென்றான், என் மகன். எங்களை கண்ட மருமகள், எங்களை வாங்க என்று கூட சொல்லவில்லை.

அதன் பின், மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து, மூன்றாவது மாதத்தில் பார்க்க போன எங்கள் மீது, இல்லாத பழியெல்லாம் சுமத்தி, தாயும், மகளும் சண்டை போட்டனர். குழந்தையை தொடக் கூடாது என்றும் கூறினர்.

ஆறாவது மாதம், குழந்தையை எங்கள் வீட்டிற்கு அழைத்து வர சென்றபோது, 'என் மகளை அனுப்ப மாட்டேன்...' என்றாள், சம்பந்தி அம்மா. குழந்தையை பார்க்க என் மகன் போனால் கூட, அவமானப்படுத்தி அனுப்பி விடுவர்.

இப்போது என் மகனுக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த, ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆண்டு கூட முழுமையாக என் மகனுடன் அவள் சேர்ந்து வாழவில்லை. மகளிர் போலீசில் புகார் பண்ணியும் எந்த பலனும் இல்லை. என் மகன் வாழ்க்கை, கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்கு.

இதற்கு நீங்கள் தான் ஒரு நல்ல ஆலோசனை கூற வேண்டும், சகோதரி.

— இப்படிக்கு,

உங்கள் சகோதரி.



அன்பு சகோதரிக்கு —

உலகில் திருமண பந்தத்தை மதித்து, நல்லது கெட்டதுகளை சமமாக பாவித்து, 'ஈகோ'களை தொலைத்து இல்லற தோணியை செலுத்தும், 80 சதவீத பெண்கள் இருக்கின்றனர்.

'ஈகோ' ராட்சசியாய் தலைவிரித்தபடி துர்போதனையில் ஊறி திளைக்கும் கலகக்காரிகள், 20 சதவீதம் இருக்கின்றனர்.

உன் மகனுக்கு, 25 வயதில் திருமணம் செய்து வைக்காமல், 32 வயது வரை ஏன் காத்திருந்தாய்?

திருமணம் தற்போது வேண்டாம் என, உன் மகன் திருமணத்தை தள்ளிப் போட்டானா? மகனின் திருமணத்தை பற்றி கவலை இல்லாமல் நீயும், கணவரும் மெத்தனமாய் இருந்தீர்களா அல்லது காதல் தோல்வியால் தாடி வளர்த்து, குடிபோதையில் மகன் தடம் புரண்டானா? அதீத எதிர்பார்ப்பில், வரும் வரன்களை எல்லாம் தட்டி கழித்தீர்களா? எல்லாம் உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.

பொதுவாக, ஒரு திருமணமான பெண்ணின் துர்நடத்தை, கணவனின் இழிவான துர்நடத்தைக்கான பக்கவிளைவாகவே இருக்கும்.

வேலைக்கு செல்ல விரும்பிய மருமகளை, அவள் விருப்பப்படி போக அனுமதித்திருக்க வேண்டியது தானே! நீ இல்லத்தரசியாய் இருப்பதால், உன் மருமகளும் அப்படி இருக்க வேண்டியது கட்டாயமா என்ன?

அவள் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றாததால், உங்கள் அனைவர் மீது கோபம் கொண்டுள்ளாள். எனவே, முதல்முறை உண்டான கருவை கலைத்திருந்திருக்கிறாள், மருமகள்.

மகனின் திருமண வாழ்வில், உன்னுடைய தலையீடும்; மருமகளின் திருமண வாழ்வில் சம்பந்தியம்மாவின் தலையீடும் மிக அதிகம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை.

இருதரப்பும் மதிக்கும் பெரியவர் ஒருவரை, மருமகள் வீட்டுக்கு அனுப்பி, மருமகளின் எதிர்பார்ப்புகளை முழுமையாக கேட்டறிந்து கொள்.

தனிக்குடித்தனம் விரும்புகிறாளா? வேலைக்கு போக துடிக்கிறாளா? மகனின் சிலபல எதிர்மறை குணங்களை களைய சொல்கிறாளா? எல்லாவற்றுக்கும் சரி சொல்லுங்கள்.

உங்களின் சமாதான உடன்படிக்கைக்கு மருமகள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை என்றால், முறைப்படியான விவாகரத்துக்கு விண்ணப்பி.

மகனுக்கு மறுமணம் என பேச்சு வரும்போது, உன் தலையீட்டை குறைத்துக் கொள்.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us