sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு -

நான், 46 வயது பெண். கணவர் வயது: 50. கணவர், வங்கியில் பணிபுரிகிறார். நான் இல்லத்தரசி. எங்களுக்கு இரு மகள்கள். கல்லுாரியில் படித்து வருகின்றனர். மூத்த மகள் என்ஜினியரிங் கடைசி ஆண்டு படிக்கிறாள். எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலிக்கின்றனராம்.

ஆனால், அந்த பையன், பிளஸ்2 மட்டுமே படித்துள்ளான். அவன் அப்பா, சொந்தமாக, 'ஹார்டுவேர்ஸ்' கடை வைத்துள்ளார். நல்ல வருமானம். பையனும் அழகாக, நல்ல குணமுள்ளவனாக காணப்படுகிறான். தன் அப்பாவின் தொழிலில் உதவியாக, பொறுப்பாக இருக்கிறான். நல்ல குடும்பமும் கூட. படிப்பு மட்டும் தான் சமமாக இல்லையே தவிர, வேறு குறை ஏதும் இல்லை.

எங்கள் குடும்பத்தில், என் கணவர் அவரது உடன்பிறப்புகள், என்னுடன் பிறந்தவர்கள் அனைவருமே நன்கு படித்தவர்கள்; உயர் பதவியில் இருப்பவர்கள்.

இதன் காரணமாக, என் கணவர் மற்றும் பெற்றோரும் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

படிப்பு இல்லாவிட்டால், பொறுப்பானவனாக இருக்கிறான். தனியாக வேறொரு இடத்தில், பெரிய அளவில், 'ஹார்டுவேர்ஸ்,' பெயின்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் அனைத்தையும் விற்கும் கடையை திறக்கப் போவதாக கூறுகிறான், அவன்.

எனக்கு விருப்பம் இருந்தாலும், என் கணவர் பிடிவாதமாக மறுத்து வருகிறார். 'இப்போது படிப்பு தடையாக இருந்தாலும், நாளைக்கு அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் என்ன செய்வது. மகளின் வாழ்க்கை நரகமாகி விடும்...' என்கிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டி, நான் தான் தவிக்கிறேன். என் மகள் எடுத்த முடிவு சரிதானா? திருமணம் நடந்தால், இரண்டு பேருக்கும் பிரச்னை வராமல் இருக்குமா?

நல்ல பதிலை கூறுங்கள், அம்மா.

- இப்படிக்கு, உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு -

உன் மூத்த மகளின், காதலன் எந்த மதத்தை, எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதை, நீ குறிப்பிடவில்லை.

அவன் வேற்று மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை. உன் கணவருடைய ஒரே பிரச்னை, மகள் அளவுக்கு அல்லது மகளை விட அதிகமாக அவன் படிக்கவில்லை என்பதே!

கல்விக்கு உன் கணவர் கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பிரமிக்க வைக்கிறது.

உன் மகளின் காதலில், நீ கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

* மூன்று ஆண்டுகளாக காதலிக்கும் அவர்கள் உடலளவிலும் நெருங்கி விட்டனரா என்பதை அவதானி

* உன் மகளின் காதலன் நேர்மையானவனா அல்லது பெண்களை காதலிப்பது அவனின் பொழுதுபோக்கா என்பதை ஆராய்

* அவனுக்கு தீய நண்பர்களும், தீய கெட்ட பழக்கவழக்கங்களும் உண்டா என்பதை உளவு பார்

* எதனால் அவன் பிளஸ் 2க்கு மேல் படிக்கவில்லை.- படிப்பு வரவில்லையா -அல்லது வேறெந்த விஷயத்திலாவது அவனுக்கு கவனச்சிதறல் இருந்ததா,- என்பதை அலசு

* உன் மகளின் காதலன் வீட்டுக்கு ஒரே பையனா அல்லது உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் இருக்கின்றனரா? இருந்தால் அவர்களாவது படித்திருக்கின்றனரா? அவர்களில் வயதில் மூத்தவர் யாராவது காதல் திருமணம் செய்திருக்கின்றனரா என, பார்

* உன் மகளின் காதலன் வீட்டில், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றனரா?

* அவன் எதாவது ஒரு சினிமா நடிகரின் மன்ற பொறுப்பில் இருக்கிறானா அல்லது எதாவது ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்கிறானா? -

மேற்சொன்ன அனைத்து அம்சங்களிலும் அவன் தேறினால் கடைசியாக ஒரு விஷயம் பண்ணு. உன் கணவர் மற்றும் உன் பெற்றோரின் விருப்பம் என்ன? மாப்பிள்ளை படிக்கவில்லை என்பது தானே.

மாப்பிள்ளை பையனை தனியாக கூப்பிட்டு பேசு. 'என்ன காரணத்தினால், நீ படிப்பை பிளஸ் 2வுடன் நிறுத்தினாய்? இந்த கல்யாணம் நடக்க, நீ இளங்கலை ஆங்கிலம் அல்லது இளங்கலை கணக்கு, பாடப்பிரிவை அஞ்சல் வழியில் படி. அத்துடன் நில்லாது நீ முதுகலை பட்டப் படிப்பையும் தொடர்ந்து படித்து முடிப்பேன் என சத்தியம் செய்...' எனக்கூறு.

ஒரு மாற்றுயோசனை. உங்கள் ஊரில் மாலை வகுப்பு நடக்கும் பொறியியல் கல்லுாரி இருந்தால், அவனை கட்டுமான பொறியியல் பட்டப்படிப்பில் சேரச் சொல். கட்டுமான பொறியியல் படிப்பது அவனது கடை வியாபாரத்துக்கும் உதவும். படித்துக் கொண்டே அவன் கடையையும் கவனிக்கலாம்.

அவன் பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு திருமணத்தை முடிவு செய். திருமண அழைப்பிதழில் மாப்பிள்ளையின் பெயருக்கு பின் பட்டத்தை அடைப்புக் குறிக்குள் போடு.

உன் மாப்பிள்ளை, நீ சொல்வதை கேட்பான். அனிச்சையாக அவனுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால், அதை முழுவதும் அகற்றி விடும்.

உன் மாப்பிள்ளை, உன் மகளை மகாராணி போல் வைத்துக்கொள்வான்.



-- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us