sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 07, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.மீனாட்சி, கன்னியாகுமரி: அந்துமணியாரே... காக்கைக்கு சாதம் வைக்கும் பழக்கம் உண்டா?

சாதம் இல்லை; பிரெட்! கூட்டில் கடிகாரம் வைத்திருக்கிறதோ தெரியவில்லை. காலை, 6:20 மணிக்கே, பல காக்கைகள் வீட்டு மதில் சுவரில் கூடி விடும். 6:30 மணிக்கு தான், நான் உணவளிப்பேன்.

ஆனால், கவிஞர் கண்ணதாசன் சொன்னதுபோல, அவை பகிர்ந்து உண்ணுவதில்லை; போட்டி போட்டபடி தான் உண்ணும்!

மொ.நல்லம்மாள், கோவை: என் தோழி ஒருத்தி, உமது சொந்த ஊர், நாகர்கோவில் என்று, கூறுகிறாள். 'இல்லை, அவருக்கு துாத்துக்குடி...' என, கூறினேன். இதில், எது உண்மை?

பிறந்தது நாகர்கோவிலில் தான்; பேபி கிளாஸ் முதல் நான்காம் வகுப்பு வரை படித்தது, துாத்துக்குடியில்!

சி.சவுந்தர்யா, முதலியார்பேட்டை, புதுச்சேரி: வெளிநாடுகளில், 'கார் டிரைவிங்' செய்த அனுபவம் உண்டா உங்களுக்கு?

இங்கிலாந்தில் வாடகைக்கு கார் எடுத்து, அந்த காரை கப்பலில் ஏற்றி, பிரான்சில் இறக்கி, அங்கிருந்து ஐரோப்பா முழுதும் காரில் பயணம் செய்திருக்கிறேன்!

பிறகு, அந்தக் காரை, ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில், அதே நிறுவனத்திடம் விட்டு விட்டு, விமானத்தில் இந்தியா திரும்பியதுண்டு!

* க.கல்பனா, சென்னை: அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா, அம்மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் வீடுகளுக்கான, மின் கட்டணத்தை, அவரவரே செலுத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர், இதுபோல் உத்தரவிடுவாரா?

உத்தரவிட்டால் நல்லது; ஆனால், நடக்காது!

* பா.ஜெயக்குமார், வந்தவாசி: கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, மக்கள் வரிப்பணம், 10 லட்சம் ரூபாய் தருவது சரியா?

கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுபவர்களையும், சாராயத்தை குடிப்பவர்களையும் தண்டிக்க வேண்டியது, அரசின் கடமையல்லவா?

க.புனிதன், கோவை: ஐ.டி.ஐ., படித்த நண்பரது மகன், லாரி ஓட்டுவதில் ஆர்வமாக இருக்கிறான். அவன் விருப்பப்படியே விட்டு விடுவது நல்லதா... இல்லை, படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தேடிக் கொள்வது நல்லதா?

அவர் விருப்பப்படியே விட்டால், சாதனையாளராக மாறுவார்; ஏகப்பட்ட லாரிகளுக்கு அதிபராகி விடுவார்!

எம்.கதீஜா, ஆம்பூர்: ஒரு மனிதன் விரைவாக கெடுவது எப்போது?

பிறருடன் ஒத்துப்போகாதவன், தன் வலிமையை அறியாதவன், தன்னை பெரிதாக நினைப்பவன், விரைவாக கெடுவான்!






      Dinamalar
      Follow us