
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்துமஸ் உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.
* ஆஸ்திரியாவில் கிறிஸ்துமசுக்கு முதல் நாள், ஒரு மெழுகுவர்த்தியும், ஜனவரி 1ல், மூன்று மெழுகுவர்த்திகளையும் ஏற்றுவர். அப்போது, 'ஆண்டவனை துதிப்போம்...' என்று கூறி பிரார்த்தனை செய்வர்
* போலந்து நாட்டில் விரதமிருந்து, சாப்பாடு மேஜையைச் சுற்றி எல்லாரும் அமரும் போது, ஒரு நாற்காலியை இயேசு பிரான் அமர, காலியாக வைத்திருப்பர்
* பல்கேரியாவில் கிறிஸ்துமசுக்கு முன் விரதமிருந்து, கிறிஸ்துமஸ் அன்று அடுப்பெரிக்கும் மரத்தின் மேல் சோளத்தை துாவியபடி, வீட்டிற்குள் எடுத்து வருவர். சோளம் துாவுவது சுபீட்சத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.