
இளம் நடிகையருக்கு, 'டப்' கொடுக்கும், நயன்தாரா!
தற்போது, 40 வயதை கடந்து விட்ட நயன்தாரா, தன் இளமையை பராமரிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக, தன்னை இளமையாக காண்பிக்க கூடிய உடைகளை தேர்வு செய்து அணிந்து நடிக்கிறார்.
உடைகளை வடிவமைப்பதற்காக மும்பையைச் சேர்ந்த, ஆடை வடிவமைப்பு நிபுணரை நியமித்துள்ளார், நயன்தாரா. மேலும், அவருக்கு எந்த நடிகைகளும் தங்களது, 'காஸ்டியூமருக்கு' கொடுக்காத அளவுக்கு அதிக சம்பளம் கொடுத்து வருகிறார்.
— எலீசா
மணிரத்னத்திற்கு, 'ஸ்பீடு பிரேக்' போட்ட, கமல்!
இந்தியன் - 2 படம், அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் தான் நடித்து வரும், தக்லைப் படத்தில், அதிக கவனம் செலுத்துகிறார், கமலஹாசன்.
'அவசரப்பட்டு படத்தை வெளியிட வேண்டாம். நிறுத்தி நிதானமாக படப்பிடிப்பை நடத்துங்கள். ஏற்கனவே, நடித்த காட்சிகளில் திருப்தி இல்லை என்றால், மீண்டும் படமாக்கி சரியான நேரத்தில் படத்தை வெளியிட்டு வெற்றி படமாக்குவோம்...' என்றும் கூறியுள்ளார், கமல்.
— சினிமா பொன்னையா
ராஷ்மிகா மந்தனா அதிரடி 'கண்டிஷன்'!
எத்தனை பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படங்களாக இருந்தாலும், அவர்கள் சொல்லும் கதைகள் பிடிக்கவில்லை என்றால், 'கால்ஷீட்' கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார், ராஷ்மிகா மந்தனா.
அந்த வகையில் ஏற்கனவே, விஜய் நடித்த, பீஸ்ட் மற்றும் தற்போது, ராம் சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கி வரும், கேம் சேஞ்சர் போன்ற பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்தபோதும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லாததால் அந்த படங்களில் நடிக்க தான் மறுத்து விட்டதாகவும் கூறுகிறார், ராஷ்மிகா.
— எலீசா
கம்பீரமாக மாறும், இயக்குனர் பாரதிராஜா!
தமிழ் சினிமாவில் ஏராளமான, மண் வாசனை படங்களை கொடுத்தவர், இயக்குனர் பாரதிராஜா. சமீபகாலமாக நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில், குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம், மார்கழி திங்கள் மற்றும் மகாராஜா என, பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, முதல் முறையாக மலையாளத்தில், ஒரு படத்தில், மோகன்லாலுடன் இணைந்து, போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கப் போகிறார். 83 வயதான போதும், அந்த போலீஸ், 'கெட் அப்'புக்காக ஓரளவு தன்னை கம்பீரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், பாரதிராஜா.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
'மெரினா நடிகரை, நான் தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினேன்...' என்று, அடிக்கடி சொல்லி அவரை வெறுப்பேத்தி விட்டார், சுள்ளான் நடிகர். இதன் காரணமாகவே அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு எதிரும் புதிருமான போட்டியாளர்களாகி விட்டனர்.
சமீபத்தில், தான் தயாரித்துள்ள படத்தின் விழாவில் பேசிய மெரினா நடிகர், 'எந்த ஒரு நடிகரை நான் அறிமுகம் செய்தாலும், அவர்களை நான் தான் சினிமாவில் வளர்த்து விட்டேன் என்று சொல்ல மாட்டேன்.
'அவர்களின் திறமையால் தான் வளர்ந்துள்ளதாக சொல்வேன். சிலரை போன்று என்னால் தான் அவர்கள் வளர்ந்தனர் என்று தம்பட்டம் அடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது...' என்று, மீண்டும் சுள்ளானுக்கு, 'அட்டாக்' கொடுத்திருக்கிறார், மெரினா நடிகர்..
சினி துளிகள்!
* பிரபலமான இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும், புதிய சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் நோக்கத்தில், ஆண்டுக்கு ஒரு புதுமுக இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார், மம்மூட்டி.
* தான் நடிக்கும் படங்களில் துக்கடா உடை அணிந்து நடித்தாலும், சினிமா விழாக்களுக்கு புடவை கெட்டப்பில் குடும்ப குத்துவிளக்காக எண்டரி கொடுக்கிறார் மாளவிகா மோகனன்
* பாலிவுட்டில் இருந்து தெலுங்கு நடிகர், மகேஷ்பாபுவுக்கு பல வாய்ப்புகள் வந்த போதும், அதை ஏற்கவில்லை. தெலுங்கு சினிமாவில் எனக்கு கிடைக்கும் வெற்றி பாராட்டுகளே போதுமானது. அதனால் டோலிவுட்டை தவிர, வேறு எந்த மொழி படத்திலும் நடிக்க மாட்டேன் என்கிறார் மகேஷ்பாபு.
* தான் தயாரி்த்த கொட்டுக்காளி என்ற படத்தில், சூரியை நாயகனாக நடிக்க வைத்தார், சிவகார்த்திகேயன். மேலும், சில நடிகர்களை தான் தயாரிக்கும் படங்களில் நடிக்க வைக்க, கதை கேட்டு வருகிறார்.
அவ்ளோதான்!