sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல!

/

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : பிப் 16, 2025

Google News

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் பாலிவுட்டில், என்ட்ரி கொடுக்கும், ரஜினி!

ஹிந்தியில், ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தை இயக்கிய, அட்லி, அடுத்தபடியாக, சல்மான்கான் நடிப்பில் ஒரு படம் இயக்கப் போகிறார்.

'பான் இந்தியா' படமாக உருவாகும் இதில், இன்னொரு, 'ஹீரோ'வாக நடிக்க, கமலிடம் பேசினார், அட்லி. ஆனால், அவர் நடிக்க மறுக்கவே இப்போது, அந்த வேடத்தில் நடிப்பதற்கு, ரஜினியிடம் பேசி ஒப்புதல் வாங்கியுள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின், பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்கிறார், ரஜினி. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

சினிமா பொன்னையா

காமெடிக்கு திரும்பும் சந்தானம்!

சந்தானம், 'ஹீரோ' ஆனதிலிருந்து, நிறைய, 'ஹாரர்' படங்களில் நடித்து வருகிறார். இந்நேரத்தில் அவர் காமெடியனாக நடித்து திரைக்கு வந்த, மதகஜராஜா படத்தில், அவரது காமெடி நடிப்புக்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே, அடுத்தடுத்து தான், 'ஹீரோ' ஆக நடிக்கும் படங்களிலும் ஆங்காங்கே தன், 'டயமிங்' காமெடிகளை தெளித்து விட, திட்டமிட்டு இருக்கிறார், சந்தானம். இதற்காக சில புதிய காமெடியன்களையும் தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

சினிமா பொன்னையா

விலங்குகளை நடிக்க வைக்கும் ராஜமவுலி!

பாகுபலி, பாகுபலி- 2 மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய, ராஜமவுலி, அடுத்தபடியாக, மகேஷ்பாபு நடிப்பில், புதிய படத்தை இயக்கப் போகிறார். விலங்குகளை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, கென்யா நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெறுகிறது.

மேலும், சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளுடன், மகேஷ் பாபு சண்டையிடும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறுவதால், அவரது முந்தைய படங்களை விட, இந்த படத்தில், 'அனிமேஷன்' காட்சிகள் அதிகமாக இடம்பெறும் என்கிறார், ராஜமவுலி.

— சி.பொ.,

கறுப்புப்பூனை!

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தன் மார்க்கெட், 'டவுண்' ஆகி வருவதால், தமிழ் மற்றும் மலையாளத்தில் கவனத்தை திருப்பி இருக்கிறார், பீஸ்ட் நடிகை. சமீபத்தில், பாலிவுட் பாணியில் சில இளவட்ட, 'ஹீரோ'களுக்கு ஸ்டார் ஹோட்டலில், சோம பான விருந்து கொடுத்து, உபசரிப்பு நடத்தி இருக்கும் பீஸ்ட் நடிகை, பாலிவுட் ஸ்டைலில் தெறிக்க விடும், 'டூ-பீஸ்' ஆட்டமாடியும் அவர்களை கிறங்கடித்திருக்கிறார்.

******

உடல் ரீதியாக வாட்டசாட்டமாக மெச்சூரிட்டியாக இருப்பதால், தங்கலான் நடிகையுடன் ஜோடியாக நடிப்பதற்கு தயங்குகின்றனர், இளவட்ட நடிகர்கள். இதனால், பல, 'ஹீரோ'களுக்கு துாது விட்டும் பலன் கொடுக்காமல் போக, இப்போது நரைமுடி, 'ஹீரோ'களுடன், 'டூயட்' பாடுவதற்கு தயாராகி விட்டார், அம்மணி. மேலும், அவசியப்பட்டால், 'ரொமான்டிக் சீன்'களில் உதட்டு முத்த காட்சிகளில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் சொல்லி, நரை முடி நடிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார், நடிகை.

சினி துளிகள்!

* விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்தார், பூனாஹெக்டே. மீண்டும் அவருடன், ஜனநாயகன் படத்தில் நடித்து வருபவர், மேலும் இரண்டு படங்களை கைப்பற்றியுள்ளார்.

* தங்கலான் படத்தை அடுத்து, பிரபாஸ் உடன், ராஜா சாப் என்ற படத்தில், நடித்து வருகிறார், மாளவிகா மோகனன். அந்த படம், 'ஹிட்' ஆனால், தன் படக்கூலியை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

* தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், சிக்கந்தர் படத்தில், சல்மான்கானுடன் இணைந்துள்ள, ராஷ்மிகா மந்தனா, அடுத்து, அட்லி இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us