
விஜய் படிக்கும் புத்தகங்கள்!
'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை துவங்கியிருக்கும், நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க போகிறார். தற்போது, ஜனநாயகன் படத்தில் நடித்து வருபவர், தமிழக அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் குறித்த புத்தகங்களைப் படிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும், சில அரசியல் விமர்சகர்களையும் அவ்வப்போது அழைத்து, அவர்களிடம் நாட்டு நடப்புகள் குறித்தும் கலந்து பேசுகிறார்; தனக்கு தெரியாத அரசியல் தகவல்களையும் அவர்களிடம் கேட்டு அறிந்து வருகிறார்.
— சினிமா பொன்னையா
டோலிவுட்டில், ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான நடிகையாக ஒரு சுற்று வந்த, ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கில், 'பிசி'யாக நடித்து வருகிறார்.
மேலும், அங்கு போன வேகத்திலேயே, 'டூ பீஸ்' நடிகையாகவும் உருவெடுத்து நிற்பதால் அங்குள்ள, 'கமர்ஷியல்' இயக்குனர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கம், 'யு டர்ன்' போட்டு நிற்கின்றனர். இதனால், இந்த நடிகை தங்களது மார்க்கெட்டுக்கு, 'ஆப்பு' வைத்து விடுவாரோ என, தெலுங்கு சினிமாவில் உள்ள இளவட்ட நடிகையர் பீதி அடைந்துள்ளனர்.
எலீசா
'ஹாரர்' படங்கள் பக்கம் திரும்பிய, மாளவிகா மோகனன்!
விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்த, மாளவிகா மோகனன், அதன்பின், மாறன் மற்றும் தங்கலான் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், எந்த படங்களிலும் அவரது நடிப்பு பேசப்படவில்லை.
தற்போது, பிரபாஸ் உடன் நடிக்கும், தி ராஜா சாப் என்ற படத்தில், 'ஹாரர்' கதையில், பேய் வேடத்தில் நடித்து வருகிறார், மாளவிகா மோகனன்.
'இந்த படம் எனக்கு, 'ஹிட்' படமாக அமைந்தால், இதன்பின் தொடர்ந்து மிரட்டலான, 'ஹாரர்' பட நாயகியாக உருவெடுக்க, திட்டமிட்டு இருக்கிறேன்...' என்கிறார்.
— எலீசா
பட்டப்பெயரை தவிர்க்கும், கோலிவுட் நடிகர்கள்!
பெரும்பாலும் நடிகர்கள், சினிமாவில் வளர்ந்து வரும்போது, தங்களது பெயருக்கு முன், ஒரு பட்டத்தை சூட்டிக் கொள்வர். அந்த வகையில், அஜித்குமார், தல மற்றும் அல்டிமேட் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், தனக்கு பட்டப்பெயரே வேண்டாம். அஜித் அல்லது ஏ.கே., என அழைக்குமாறு அறிவித்திருந்தார்.
அதையடுத்து, கமலஹாசனும், தன்னை யாரும், உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் என, கோரிக்கை வைத்தார். தற்போது, 'லேடி சூப்பர் ஸ்டார்' என, தன் பெயருக்கு முன்பு போட்டுக் கொண்ட, நயன்தாராவும், 'இனிமேல் யாரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என, அழைக்க வேண்டாம். என் பெயரை மட்டுமே குறிப்பிட்டால் போதும்...' என, தற்போது வேண்டுகோள் வைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை...
முன்பெல்லாம் நட்பு வட்டாரத்துக்கு, தன் படக்கூலியை பெரிய அளவில் விட்டுக் கொடுத்து வந்துள்ளார், மூனுஷா நடிகை. ஆனால், சமீபகாலமாக படக்கூலி விவகாரத்தில் ரொம்பவே கறார் காட்டுகிறார், நடிகை.
குறிப்பாக, 'படம் திரைக்கு வந்த பின், வியாபாரம் செய்துவிட்டு சம்பளத்தை தருகிறோம்...' என, யாராவது சொன்னால், அவர் ஏற்பதில்லை. 'கிளைமாக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே மொத்த படக்கூலியையும் கொடுக்க வேண்டும் என, 'கட் அண்டு ரைட்'டாக பேசுகிறார், மூனுஷா நடிகை.
****
ரவுடி பேபி நடிகை, தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த இரண்டு படங்கள், 'சூப்பர் ஹிட்' அடித்தன. இதையடுத்து, தற்போது பாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கு, 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.
தென்மாநில படங்களில் நடிக்க தன்னை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர்களிடம், 'இப்போது நான், 'பான் இந்தியா' நடிகை. அதனால், அதே, 15 கோடி ரூபாயை வெட்டியாக வேண்டும். இல்லையேல் நடையை கட்டுங்கள்...' என, முகத்தில் அடித்தார் போல் சொல்லியடித்து வருகிறார், ரவுடி பேபி.
*****
சினி துளிகள்!
* பராசக்தி மற்றும் மதராஸி படங்களில் நடித்து வரும், சிவகார்த்திகேயன் அடுத்து, மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கவும் கதை கேட்டுள்ளார். இப்படத்தில், ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
* விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின், மீண்டும், தக்லைப் படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார், த்ரிஷா
* அமரன் படத்திற்கு பின், தெலுங்கில், தண்டேல் படத்தில் நடித்த, சாய் பல்லவி, தற்போது ஹிந்தியில், ஏக் டின் மற்றும் ராமாயணா படத்தின் முதல் பாகத்திலும் நடித்து வருகிறார்.
* தற்போது, கூலி படத்தை இயக்கி வரும், லோகேஷ் கனகராஜ், அடுத்து, கைதி- - 2 மற்றும் ரோலக்ஸ் படங்களை இயக்கி முடித்ததும், தெலுங்கு நடிகர், பிரபாஸை வைத்து படம் இயக்க அவரிடத்தில் கதை சொல்லியிருக்கிறார்.
அவ்ளோதான்!