
அம்மன் வேடங்களில் நடிக்கும், நயன்தாரா, த்ரிஷா!
ஏ ற்கனவே, மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்திருந்த, நயன்தாரா, இப்போது அப்படத்தின், இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 1990ல், ராம நாராயணன் இயக்கத்தில், சீதா நடிப்பில் வெளியான, ஆடி வெள்ளி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது, அம்மன் வேடத்தில் நடிக்க போகிறார், த்ரிஷா.
அதனால், மூக்குத்தி அம்மன் நயன்தாராவை விட, இந்த 2ம் பாக படத்தில் தான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் அபிமானத்தை பெற வேண்டும் என, திட்டமிட்டு வருகிறார், த்ரிஷா. இப்படத்தில் நடிப்பதற்கு முன், சில பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யப் போவதாக கூறுகிறார்.
— எலீசா
விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த, பிரேம்குமார்!
வி ஜய் சேதுபதி -- த்ரிஷா நடித்த, 96 என்ற காதல் படத்தை இயக்கிய, பிரேம்குமார், அதையடுத்து அரவிந்த்சாமி, கார்த்திக் நடித்த, மெய்யழகன் என்ற, 'சென்டிமென்ட்' படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே, 'சூப்பர் ஹிட்' அடித்த நிலையில், தற்போது குடும்ப உறவுகளை மையப்படுத்தி, விக்ரமிடம் ஒரு கதை சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கதை கேட்டு உற்சாகம் அடைந்துள்ள விக்ரம், 'பொன்னியின் செல்வன் மற்றும் தங்கலான் படங்களுக்குப் பின், என் திறமைக்கு தீனி போடக் கூடிய சரியான படம் இது...' எனச் சொல்லி, இந்த படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.
சினிமா பொன்னையா
சவாலான வேடம் தேடும், அனுஷ்கா!
த ற்போது, காட்டி என்ற தெலுங்கு படத்தில், கதையின் நாயகியாக நடித்துள்ளார், அனுஷ்கா. இந்த படத்தில், கஞ்சா விற்பனை செய்யும் பெண்ணாக நடித்திருக்கும் அவர், சுருட்டு பிடிப்பது மட்டுமின்றி, எதிரிகளை பந்தாடும் ஆவேச காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இதுபோன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு இருந்தால், தன்னை அணுகும்படியும் இயக்குனர்களிடம் கூறி வருகிறார், அனுஷ்கா.
— எலீசா
வில்லி அவதாரம் எடுக்கும், ராஷ்மிகா மந்தனா!
'ரொமான்டிக்' கதைகளில் நடித்து வரும், ராஷ்மிகா மந்தனா, தற்போது மாறுபட்ட கதைகள் பக்கமும் திரும்பி இருக்கிறார். குறிப்பாக, அதிரடியான, 'ஆக்ஷன் ரோல்' மற்றும் 'நெகடீவ்' கலந்த வேடங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையடுத்து சில அதிரடிப்பட இயக்குனர்களை அணுகி, 'ஹீரோயினி இமேஜை' பாதிக்காத அளவுக்கு வில்லியாக நடிப்பதற்கும் வாய்ப்பு கேட்டு வருகிறார், ராஷ்மிகா.
சில ஹாலிவுட் நடிகையர், 'ஹீரோயின்' மற்றும் வில்லி என, மாறுபட்ட கோணத்தில் நடித்துள்ள படங்களையும் மேற்கோள்காட்டி, அதேபோன்று தன்னையும் திரையில் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறார்.
— எலீசா
வடிவேலுவின் புதிய, 'டார்கெட்!'
கா மெடியன் வடிவேலு கதையின் நாயகனாக உருவெடுத்து, தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். குறிப்பாக, காமெடியனால் ரசிகர்களை கண்கலங்கவும் வைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், அழுத்தமான, 'எமோஷனல்' கதாபாத்திரங்களை தேடுகிறார், வடிவேலு.
'எதிர்காலத்தில் நான் நடிக்கும் வேடங்களுக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட கதைகளில் என்னை நடிக்க வையுங்கள்...' என, சில விருது பட இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சினிமா பொன்னையா
கருப்பு பூனை...
பிரியமான அந்த கன்னடத்து நடிகை, பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களுக்கு தன், 'பாய் பிரண்டோடு' தான், 'விசிட்' அடிக்கிறார். மேலும், அம்மணிக்கான, 'ஷாட்' முடிந்து விட்டால், இரண்டு பேரும் கேரவனுக்குள் சென்று, மணிக்கணக்கில் குஜாலாவில் இறங்கி விடுகின்றனராம்.
அடுத்த, 'ஷாட்'டுக்கு இயக்குனர் அழைத்தால் கூட, அம்மணி வெளியில் தலை காட்டுவது இல்லை. இதனால், உஷார் ஆகிவிட்ட இயக்குனர்கள், 'இனிமேல் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது, 'பாய் பிரண்டை' அழைத்து வரக்கூடாது. அப்படி வந்தால், 'ஸ்பாட்'டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்...' என, நடிகைக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
சினிதுளிகள்!
* ஒரு கோடி ரூபாயாக இருந்த தன் சம்பளத்தை, தற்போது, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தி விட்டுள்ளார், பிரியங்கா மோகன்.
அவ்ளோதான்!

