sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சம்பளம் வாங்காமல், ஆடியோ உரிமையை வாங்கும், அனிருத்!

த ற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்நிலையில், ஒரு படத்திற்கு இசையமைக்க, 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் அவர், தற்போது சம்பளத்துக்கு பதிலாக ஆடியோ உரிமையை தனக்கு தருமாறு தயாரிப்பாளர்களிடம், 'டீல்' பேசி வருகிறார். அனிருத் இசையமைக்கும் படங்களின், 'ஆடியோ ரைட்ஸ்' 20 கோடி ரூபாய் வரை விலை போவதே இதற்கு காரணம்.

- சினிமா பொன்னையா



'காஸ்ட்லி'யான வைர நெக்லசுடன் வலம் வரும், ராஷ்மிகா!


த ற்போது, இந்திய அளவில் முன்னணி நடிகையாகி விட்ட, நடிகை, ராஷ்மிகா மந்தனா, ஐந்து மொழிகளில் உருவாகும், மைசா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ள அவர், சமீப காலமாக சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, 'காஸ்ட்லி'யான உடை மற்றும் அணிகலன்களை அணிந்து வருகிறார். அந்த வகையில், தன் கையில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வாட்ச் மற்றும் கழுத்தில், இரண்டு கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் அணிந்து சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

- எலீசா

ஒரு டஜன் கதைகளை தவிர்த்த, ஜான்வி கபூர்!

ந டிகை, ஸ்ரீதேவியின் மூத்த மகள், நடிகை, ஜான்வி கபூர், தெலுங்கில், நடிகர், ஜூனியர் என்டிஆருடன், தேவரா தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தற்போது, நடிகர் ராம் சரணுடன், பெத்தி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் படத்தில் அவரை அறிமுகம் செய்வதற்காக பல இயக்குனர்கள் அவரை தேடிச்சென்று கதை கூறினர். ஆனால், அவர் எந்த கதையையும் ஓ.கே., செய்யவில்லை.

காரணம் கேட்டால், 'முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை பெரிய அளவில், 'இம்ப்ரஸ்' பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், தமிழில் நடிக்க கேட்ட, ஒரு டஜன் கதைகளில் ஒன்றுகூட தேறவில்லை...' என்கிறார், ஜான்வி கபூர்.

- எலீசா

இருட்டடிப்பு செய்யப்படும், ஆண்ட்ரியா!

பெ ரும்பாலான நடிகையர், பெட்ரூம் சீன், சரக்கு மற்றும் தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தபோதும், 'நான் எதற்கும் தயார்!' என்று அது போன்ற வேடங்களில் துணிச்சலாக நடித்து வந்தார் நடிகை, ஆண்ட்ரியா. அதைப்பார்த்து இயக்குனர்கள் அவருக்கு அது போன்ற காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினர். இதனால், 'ஹீரோ'கள், ஆண்ட்ரியாவை ஓரம் கட்ட துவங்கினர். சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த, ஆண்ட்ரியா தற்போது, அவரே தயாரிப்பாளராகி, அதிரடியான கதாபாத்திரங்களோடு மீண்டும், தன்னை முன்னிறுத்தி படம் இயக்குமாறு சில இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

- எலீசா

வில்லனாக களம் இறங்குகிறார், விக்ரம் பிரபு!

நடிகர், விக்ரம் பிரபு நடித்த படங்களின் தோல்வி காரணமாக மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கிறார். அதனால், மூன்றாம் தட்டு, 'ஹீரோ' பட்டியலில் இடம் பிடித்திருக்கும் அவர், அடுத்த கட்டமாக முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். மேலும், பல மொழி படங்களிலும் நடிக்க கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்போவதாகவும் கூறுகிறார்.

-சினிமா பொன்னையா

கருப்புப் பூனை!

புரோட்டா நடிகர், 'ஹீரோ'வாகிவிட்ட போதும் அவருக்கென்று இன்னமும் ஒரு ரசிகர் வட்டம் உருவாகவில்லை. அதன் காரணமாகவே தன் படங்களுக்கு ஒரு, 'ஓப்பனிங்'கை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ரசிகர் கூட்டம் தேவை என்பதால் தற்போது சில முக்கிய மேல் தட்டு நடிகர்களுடன் சந்திப்பு நடத்தி, அவர்களின் ரசிகர்களை தன் பக்கம் திருப்பும் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில், தல நடிகரை தான் சந்தித்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய புரோட்டா நடிகர், அடுத்தபடியாக இன்னும் சில மேல் தட்டு நடிகர்களையும் குறி வைத்து வருகிறார். ஆனால், நடிகரின் இந்த திட்டத்தை, 'நோட்' பண்ணி விட்ட, அமரன் நடிகர், உஷாராகி விட்டார். 'இப்பதான் நானே வளர்ந்து வருகிறேன்; எனக்கான, ரசிகர் கூட்டமும் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் என் ரசிகர்களை பங்கு போட திட்டம் போட வேண்டாம்...' என்று, புரோட்டா நடிகருக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டார்.

சினி துளிகள்!

* பராசக்தி படத்தை அடுத்து, இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்ரவர்த்தி ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர், சிவகார்த்திகேயன்.

* மாமன் படத்தை அடுத்து, தற்போது, மண்டாடி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் நடிகர், சூரி. இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.

* தமிழில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான, கைதி படம் ஹிந்தியில், போலா என்ற பெயரில், 'ரீ-மேக்'கான நிலையில், தற்போது மலேசிய நாட்டு மலாய் மொழியில், பாண்டுன் என்ற பெயரில், 'ரீ-மேக்' ஆகி உள்ளது.

* சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள, பராசக்தி படம், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும், நுாறாவது படமாகும்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us