தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீண்டும் கதையை மாற்றும் மணிரத்னம்!

கமலை வைத்து தான் இயக்கிய, தக்லைப் என்ற தமிழ் படம் அதிர்ச்சி தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது, விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கப் போகும் புதிய படத்திற்கு, கூடுதலாக உழைத்து வருகிறார், மணிரத்னம். ஏற்கனவே தயார் செய்த திரைக்கதையில், முழு திருப்தி ஏற்படாமல், அதை ஏறக்கட்டிவிட்டு புதிய, திரைக்கதை எழுதும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

அதோடு, இந்த முறை, 'மெகா ஹிட்' கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்காக, இந்த கதை விவாதத்தில் பல எழுத்தாளர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு, விவாதம் நடத்தி, தான் எதிர்பார்த்த, திரைக்கதை உருவாகும் வரை படப்பிடிப்பை தள்ளி வைக்கப்போவதாக கூறுகிறார், மணிரத்னம்.

 சினிமா பொன்னையா

கவலைப்படாத, த்ரிஷா!

சமீபகாலமாக, த்ரிஷா குறித்து, 'சோஷியல் மீடியா'வில் பலதரப்பட்ட அவதுாறு செய்திகள் பரவி வருகிறது. இதனால், த்ரிஷா தன் துாக்கத்தை தொலைத்து விட்டதாக ஒரு செய்தியும் பரவி வருகிறது. இதையடுத்து அவரோ, 'என்னுடைய துாக்கத்தை யாராலும் கெடுக்க முடியாது. காரணம், நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேலை வெட்டி இல்லாத யாரோ என்னை குறிவைத்து திட்டமிட்டு பரப்பும் பொய்யான வதந்திகளை நான், 'மைண்டில்' ஏற்றிக்கொள்வதே இல்லை...' என்று, 'கேஷுவலாக' சொல்கிறார், த்ரிஷா.

—  எலீசா

'கிளாமரை' கையிலெடுத்த, நயன்தாரா!

ஏற்கனவே, அஜித்துடன் நடித்த, பில்லா படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இளசுகளை, 'அட்டாக்' செய்திருந்த நடிகை, நயன்தாரா, அதன் பிறகு, 'கிளாமர்' காட்சிகளில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது, கன்னட நடிகர், யஷ்ஷுடன் நடித்திருக்கும், டாக்ஸிக் என்ற கன்னட படத்தில் மீண்டும், 'கிளாமராக' நடித்துள்ளார். அவருடன் இதே படத்தில் நடித்துள்ள, ஹிந்தி நடிகையர், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் கன்னட நடிகை, ருக்மிணி வசந்த் ஆகியோருக்கு பெரிய அளவில், 'டப்' கொடுக்கவே, 'கிளாமர்' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார், நயன்தாரா.

—  எலீசா

பழைய, 'ரூட்'டுக்கே திரும்பும், விஜய் சேதுபதி!

'ஹீரோ'வாக நடித்தபடியே, வில்லனாகவும் நடித்து வந்த, விஜய் சேதுபதி திடீரென்று வில்லன் வேடத்திற்கு தடை போட்டு இருந்தார். ஆனால், 'ஹீரோ'வாக மட்டுமே நடிப்பதற்கு, அவர் கேட்டு வந்த கதைகள் பெரிதாக திருப்தியை கொடுக்கவில்லையாம். தற்போது, 'கதாநாயகனாக மட்டுமின்றி, மாறுபட்ட வில்லன் வேடங்கள் கிடைத்தாலும் நடிப்பேன்...' என்கிறார், விஜய் சேதுபதி.

முன்னணி நடிகர்களுக்கு, 'டப்' கொடுக்கக்கூடிய, வில்லன், 'ரோல்' என்றால், தன் நடிப்புக்கு தீனி போடக் கூடியதாக இருக்கும் என்பதால், அது போன்ற கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பி இருக்கிறார்.

—  சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

புரோட்டா காமெடியன் தற்போது, 'ஹீரோ'வாகிவிட்டதை அடுத்து, 'அவுட்டோர்' படப்பிடிப்புகளில் ஏகப்பட்ட அலப்பறை செய்கிறார். குறிப்பாக, தனக்கு, 'மேக்-அப்' மற்றும் 'காஸ்டியூம் ஐட்டங்கள்' எல்லாம் முன்னணி, 'ஹீரோ'கள் ரேஞ்சுக்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். குக்கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தாலும், ஸ்டார் ஹோட்டல், 'மீல்ஸ்' தான் வேண்டுமென்று, 'கட் அண்ட் ரைட்'டாக கூறுகிறார். நடிகரின், இந்த திடீர் பந்தா காரணமாக பதறும் தயாரிப்பாளர்கள், 'அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்த ஒரு நடிகர், இப்படியா தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரியாமல் நடந்து கொள்வது...' என்று, புரோட்டா நடிகரை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்க்கின்றனர்.

தமிழில், சந்திரமுகி நடிகைக்கென்று ஒரு பெரிய பெயர் உள்ளது. ஆனால், அவரோ, திடீரென்று தன் தாய் மொழியான ஹிந்தி படங்களில் நடித்து, பெரிய ஆளாக வேண்டும் என்று, பாலிவுட்டுக்கு சென்றார். ஆனால், அங்கு போன இடத்தில், அவருக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லையாம். குறிப்பாக, எல்லா விஷயத்துக்கும் பேரம் பேசுகின்றனராம். அதாவது, இவர் தன்னுடன் அழைத்துச் செல்லும் ஊழியர்களின் சம்பளம் மட்டுமின்றி தங்கும் இடம், ஹோட்டல் சாப்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் பெரிய அளவில் கணக்கு பார்ப்பதோடு, இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சார்பில் கட்டுப்பாடு விதிக்கின்றனராம். இதனால், 'கோலிவுட்டில், ராஜமரியாதையுடன் நடித்து வந்த நான், இப்படி தாய்மொழியில் நடிக்க ஆசைப்பட்டு வந்து அசிங்கப்பட்டு நிற்கிறேனே...' என்று புலம்பித்தள்ளுகிறார், சந்திரமுகி. <<<

சினி துளிகள்!

* ஹிந்தியில் எதிர்பார்த்தபடி, 'வெயிட்'டான வேடங்கள் கிடைக்காமல், மீண்டும் தமிழில் நடிக்க கதை தேடி வருகிறார், ஜோதிகா.

* சூரி நடித்து வரும், மண்டாடி என்ற தமிழ் படத்தில், அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை, மஹிமா நம்பியார் நடிக்கிறார்.

* விஷ்ணு விஷால் நடிப்பில், ராட்சசன் என்ற படத்தை, இயக்கிய இயக்குனர், ராம்குமார், தற்போது மீண்டும் அவரை வைத்து, இரண்டு வானம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

* வாரணாசி என்ற பலமொழி படத்தின் படப்பிடிப்பை, ஆப்ரிக்கா காடுகளில் நடத்தி வந்த, இயக்குனர், ராஜமவுலி, தற்போது ஹைதராபாத்தில், 'செட்' போட்டு, மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

* ரஜினி நடித்த, ஜெயிலர் தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்திலும், ரஜினியின் மனைவியாகவே நடித்து வருகிறார், ரம்யா கிருஷ்ணன்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us