sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னணி இயக்குனர்களுக்கே முதலிடம்!

தமிழ் சினிமாவில், வேகமாக வளர்ந்து வரும், சிவகார்த்திகேயன், முன்வரிசை, 'ஹீரோ' பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்.

தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருபவர், அடுத்து, எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில மெகா பட இயக்குனர்களை துரத்தி வருகிறார்.

— சினிமா பொன்னையா

கோல்டு பிசினஸில் இறங்கும், தமன்னா!

நடிகை தமன்னாவின் தந்தை, மும்பையில் தங்க நகை விற்பனை செய்யும் ஜூவல்லரி நடத்தி வருகிறார். தற்போது, தன் சினிமா மார்க்கெட், 'டவுண்' ஆகி இருப்பதால், தந்தை நடத்தும் ஜூவல்லரியின் அடுத்த கிளையை, மும்பையில், பிரமாண்டமாக திறந்துள்ளார், தமன்னா.

இந்த ஜூவல்லரி கடையில் தங்க நகைகளை அள்ளிக் குவிப்பதற்காக, மும்பையில் உள்ள, ஏழு கோடி மதிப்பிலான மூன்று வீடுகளை விற்று, தொழிலில் முதலீடு செய்திருக்கிறார், தமன்னா.

— எலீசா

'லிப்லாக்' காட்சியை கேட்டு வாங்கும், ரகுல் ப்ரீத் சிங்!

சமீபத்தில், தன் காதலரை திருமணம் செய்து கொண்ட, நடிகை ரகுல் ப்ரீத் சிங், திருமணத்திற்கு பின், 'பிசி'யாக நடித்து வருகிறார்.

அதோடு படு கவர்ச்சியாகவும் நடித்து வருபவர், 'ரொமான்டிக்' கதாபாத்திரங்களில், 'லிப் லாக்' காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று, இயக்குனர்கள் சொல்லாத போதும், 'இதுபோன்ற கதாபாத்திரங்களுக்கு, 'லிப் லாக்' காட்சி வேண்டும். அப்போதுதான் அந்த கதாபாத்திரம் முழுமை பெறும்...' என்று கேட்டு வாங்கி, நடித்து வருகிறார், ரகுல் ப்ரீத் சிங்.

அவரது இந்த செயல்பாடு திருமணமான நடிகையரை, திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

எலீசா

விக்ரம் கொடுத்த பயிற்சி!

விக்ரமின் மகனான, துருவ் விக்ரம் தற்போது, பைசன் என்ற படத்தில், கபடி விளையாட்டு வீரராக நடித்து வருகிறார். எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த சில பிரபலமான கபடி வீரர்களின் வீடியோக்களை, மகனுக்கு வாங்கி கொடுத்து, அதை உள்வாங்கி நடிக்குமாறு கூறியுள்ளார், விக்ரம்.

மேலும், சென்னையில் உள்ள சில கபடி வீரர்களையும் தன் வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் மகனை விளையாட வைத்தும் பயிற்சி கொடுத்துள்ளார்.

— சி.பொ.,

கறுப்புப் பூனை!

மும்பையில் குடியேறிய, ஜோ நடிகை, அவ்வப்போது சென்னை வருகிறார்.

அப்படி வருபவர், தன் குடும்பத்தினர் வீடுகளில் தங்காமல், ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்து, மும்பை பறந்து விடுகிறார்.

காரணம் விசாரித்ததில், அம்மணி மும்பையில் குடியேறியது, அவரது புகுந்த வீட்டினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இந்த கோபத்தில் அவருடன் யாரும் சரியான பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.

இதனாலேயே, சென்னையில் சொந்தமாக பங்களா இருந்தும், அங்கு சென்றால், குடும்பத்தாரை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்காகவே, ஹோட்டலில் தங்கி விட்டு, மும்பைக்கு பறந்து விடுகிறார்.

சினி துளிகள்!

* பிள்ளைகளின் படிப்புக்காக மும்பையில் குடியேறி இருப்பதாக ஆரம்பத்தில் கூறிய நடிகை ஜோதிகா, இனிமேல், மும்பையிலேயே நிரந்தரமாக தங்கி விட, முடிவெடுத்து உள்ளார்.

* விஜயுடன், வாரிசு மற்றும் தனுஷுடன், குபேரா படத்தில் நடித்து வரும், ராஷ்மிகா மந்தனா, அடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும், பாஸ் என்ற படத்திலும் நடிக்க போகிறார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us