PUBLISHED ON : அக் 04, 2026
அ நிறம் | அளவு
த ற்போது, தெலுங்கு நடிகர், மகேஷ் பாபு நடிப்பில், வாரணாசி என்ற பல மொழிகளில் உருவாகும் படத்தை, பிரமாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர், ராஜமவுலி. இந்தப் படத்தின் கதை, ஆப்ரிக்க நாட்டின் காடுகள் வரை செல்வதால், அங்கு, டைனோசர்கள் இடம்பெறுவது போன்று உருவாக்கியிருக்கிறார். அதனால், வாரணாசி பட செட்டில், டைனோசர் உருவங்களை உருவாக்கி, ‘கிராபிக்ஸ்' மூலம் அவை உயிர் பெற்று வருவது போன்றும் படமாக்கியுள்ளார். அதோடு, டைனோசருடன், மகேஷ் பாபு மோதும் பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெறுகிறது. — சி.பொ.,
