PUBLISHED ON : செப் 22, 2024

உலகம் இருட்டு தான்
நீ அதில் வெளிச்சம்
ஏற்றி வர வேண்டும்...
உலகம் சிலருக்கு
போர்க்களம் தான்
அதில் போராடி தான்
வாழ வேண்டும்!
உலகம் ஒரு புரியாத
புதிர் தான்...
நீ தான் அதற்கு
விடை காண வேண்டும்!
உலகம் போட்டிகள் நிறைந்தது தான்...
நீ திறமையாக வாழ
உன்னை தயார்
படுத்த வேண்டும்!
உலகம் ஏற்றத்தாழ்வுகள்
நிறைந்தது தான்...
நீ அதைப் பெரிதென
எண்ணாமல்
எல்லாரும் விரும்பும் படி
வாழ வேண்டும்!
உலகம் சுயநல பாதையில்
செல்லக் கூடியது தான்...
நீ அதில் பொது நலம்
செய்து வியக்க
வைக்க வேண்டும்!
உலகம் பணத்தை
நோக்கி ஓடக் கூடியது தான்...
நீ அதில் அன்பை
நோக்கி ஓட வேண்டும்!
உலகம் சண்டை
சச்சரவுகள்
நிறைந்தது தான்...
நீ அதில் சமாதானக்
கொடியை காட்ட
வேண்டும்!
உலகம் ஜாதி பேதங்களால்
ஆனது தான்...
நீ அதில் சகோதர
உணர்வை காட்ட
வேண்டும்!
உலகம் சமயத்துக்கு
தகுந்தாற் போல்
பேசக் கூடியது தான்...
நீ கொள்கை மாறாமல்
உண்மையாக
இருக்க வேண்டும்!
இது தான் உலகம்
என்று தெரிந்து
அதற்கு தகுந்தாற்
போல் உன்னையே
மாற்றிவிடு!
உலகம் எப்படி
வேண்டுமானாலும்
இருக்கட்டும்...
உண்மை, நேர்மை
ஒழுக்கம், அன்பு
ஒற்றுமை குணம்
துணை செய்யும்!
இவைகளை உன்
கொள்கைகளாய்
இதயத்தில் ஏற்று...
எல்லாரும் ஒருநாள்
உன்னை புரிந்து
உன் தலைமையை
ஏற்றுக் கொள்ளும்
காலம் வரும்!
— எம்.பாலகிருஷ்ணன், மதுரை.