
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாணயமாக நடப்பவருக்கே
நற்பெயர் சொந்தம்
பொறுமையை மதிப்பவருக்கே
நன்மைகள் சொந்தம்!
* உழைப்பாளியாக இருப்பவருக்கே
நல்வாழ்வு சொந்தம்
பொதுநலம் நேசிப்பவருக்கே
பெரும்புகழ் சொந்தம்!
* சிக்கனமாக வாழ்பவருக்கே
மகிழ்ச்சி சொந்தம்
சேமிப்பை பின்பற்றுபவருக்கே
எதிர்காலம் சொந்தம்!
* இனிமையாக பேசுபவருக்கே
உறவுகள் சொந்தம்
மனிதநேயம் கொள்பவருக்கே
மனநிறைவு சொந்தம்!
* ஒற்றுமையை விரும்புபவருக்கே
நல்லெண்ணம் சொந்தம்
சமத்துவத்தை பேணுபவருக்கே
நல்லாசிகள் சொந்தம்!
* விசுவாசத்தை காட்டுபவருக்கே
சலுகைகள் சொந்தம்
நியாயத்தைக் காப்பவருக்கே
மரியாதை சொந்தம்!
* நேர்மையை ஒழுகுபவருக்கே
கவுரவம் சொந்தம்
நேர்வழியில் செல்பவருக்கே
ஆரோக்கியம் சொந்தம்!
* விடாமல் முயல்பவருக்கே
சாதனைகள் சொந்தம்
சோம்பலை விரட்டுபவருக்கே
வெற்றிகள் சொந்தம்!
— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.