PUBLISHED ON : ஏப் 13, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏப்., 14 - தமிழ் புத்தாண்டு
* மகிழ்ச்சி பொங்கநலன்கள் பெருக
சந்தோஷம் சேர
விசுவாவசு புத்தாண்டே வருக!
* வளங்கள் வர
விரும்பியது கிடைக்க
மனநிம்மதி நிரம்ப
விசுவாவசுவே வருக!
* புதுமைகள் தொடர
மாற்றங்கள் மலர
அன்பு நிலைக்க
விசுவாவசுவே வருக!
* உழைப்பு நல்க
அழகு செழிக்க
வெற்றி சூட
விசுவாவசுவே வருக!
* இன்பம் கூட
தடைகள் உடைய
தரம் தங்க
விசுவாவசுவே வருக!
* நன்மை நிறைய
தெளிவு பிறக்க
சிந்தனை ஒளிர
விசுவாவசுவே வருக!
* ஆரோக்கியம் மிளிர
நட்பு விரிய
செல்வம் கொழிக்க
விசுவாவசுவே வருக!
— வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு.