sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!


PUBLISHED ON : ஏப் 27, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 1 - உழைப்பாளர் தினம்!

* உழவன் எனும் உழைப்பாளி

நிலமற்றவர்களுக்கும் சேர்த்தே

வியர்வை சிந்தி சேற்றில் பாடுபட்டு

உண்ணச் சோறு போடுகிறான்!

* ஆசிரியர் எனும் உழைப்பாளி

கட்டுப்படாதவர்களுக்கும் சேர்த்தே

சிரத்தையோடு பாடங்களை கற்பித்து

சிந்தையில் அறிவை புகட்டுகிறான்!

* மருத்துவன் எனும் உழைப்பாளி

அக்கறையற்றவர்களுக்கும் சேர்த்தே

புதுப் புது நோய்களோடு போராடி

விலைமதிப்பற்ற உயிரை மீட்கிறான்!

* துப்புரவாளர் எனும் உழைப்பாளி

பொறுப்பற்றவர்களுக்கும் சேர்த்தே

இரவு, பகலாய் துாய்மை பணி செய்து

ஈடில்லா ஆரோக்கியம் காக்கிறான்!

* பத்திரிகையாளன் எனும் உழைப்பாளிபயந்தாங்கொள்ளிகளுக்கும் சேர்த்தே உயிரை பணயம் வைத்து

செய்தி சேகரித்து அளிக்கிறான்!

* ஓட்டுனர் எனும் உழைப்பாளி

உறங்குபவர்களுக்கும் சேர்த்தே

கண் விழித்து கவனமாய் வாகனம் இயக்கி

ஊர் கொண்டு போய் சேர்க்கிறான்!

* இன்னும் பலவகை உழைப்பாளிகள்

வீட்டுக்கும், நாட்டுக்கும் சேர்த்தே

அன்றாடம் ஓய்வின்றி உழைப்பதை

ஆண்டில் ஓர் நாளிலாவது மதித்து

நன்றியோடு போற்றுங்கள்!



- வெ.பாலமுருகன், திருச்சி.தொடர்புக்கு : 89735 19952

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us