/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: ஒன்று கூடி மகிழும் நாள்!
/
கவிதைச்சோலை: ஒன்று கூடி மகிழும் நாள்!
PUBLISHED ON : செப் 21, 2025

செப்., 22 - அக்., 02, 2025 - நவராத்திரி
சக்தி வழிபாடு சிறந்தோங்கும் நனிசிறந்த நவராத்திரி நன்னாள்
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி தேவியர்
அருள் வழங்கும் பொன்னாள்!
தாமசம் நீங்கி, சாத்விகம் பெறவும்
மனிதர் முக்தி நோக்கி நகரவும்
ஆன்மிக ஒளியால் வழிகாட்டி
வாழ்வுக்கு மாண்பு சேர்த்திடும் நாள்!
துஷ்டர்களை அழித்து
பாதுகாத்திடுவாள் துர்க்கா தேவி
செல்வங்களை அருளி
மகிழ செய்திடுவாள் லட்சுமி தேவி
ஞான ஒளியால் சிந்தனையை
சிறக்க வைத்திடுவாள் சரஸ்வதி தேவி!
ஆதி லட்சுமி துவங்கி
வித்யா லட்சுமி வரை
அஷ்ட லட்சுமிகள் அருளால்
வேண்டுவோர் வாழ்வு செழித்திடும்!
கொலு, நம் பாரம்பரியத்தின் பெருமைமிகு கம்பீர அடையாளம்
பொம்மைகள் ஒவ்வொன்றும்
புராண கதைகளை சொல்லும்!
வளரும் குழந்தைகளுக்கு
ஆன்மிக அறிவு புகட்டும் விழா
பாடல், நடனம், விருந்தோம்பல் என
சமூகப் பிணைப்பால்
ஒற்றுமையை காக்கும் விழா!
ஈகையால் மகிழ செய்யும் விழா
பகிரும் எண்ணம் வளர்க்கும் விழா
புதிய முயற்சிகளுக்கு உகந்த நாள்
குடும்பங்கள் ஒன்றுகூடி மகிழும் நாள்!
- விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.

