sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

கவிதைச்சோலை: கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

கவிதைச்சோலை: கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!


PUBLISHED ON : ஜன 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன., 26 - குடியரசு தினம்

பாரத மாதாவின்

பெருந்தவத்தால்

அருந்தவப் புதல்வர்களாய்

அவதரித்தோம்...

தாய்த்திருநாட்டின்

அருமை பெருமைகளை

பாருக்கு பறைசாற்ற

குடியரசு திருநாளை

கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

ஊருக்கு உழைத்திட்ட

உத்தமர்கள் வழிகாட்ட

உண்மைக்கு தலைவணங்கி

உயர்வுக்கு வித்திட்டு

அனைவரையும் அரவணைத்து

அகிலமெல்லாம் புகழ்பரவ

குடியரசு திருநாளை

கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

ஜாதி மத பேதங்களை

சாடுகின்ற நாடாக

ஏழை பணக்காரரென

பாரபட்சம் ஏதுமின்றி

சத்தியத்தின் வழிநின்று

சமத்துவத்தை நிலைநாட்ட

குடியரசு திருநாளை

கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

வளமைக்கு வித்திட்டு

வறுமைக்கு விடை கொடுத்து

இல்லாமை இயலாமை

இல்லாமல் எல்லாரும்

எந்நாளும் ஏற்றமுற

குடியரசு திருநாளை

கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

-- நா.கிருஷ்ணசாமி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us