sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: காதல் புனிதமானது!

கவிதைச்சோலை: காதல் புனிதமானது!

கவிதைச்சோலை: காதல் புனிதமானது!


PUBLISHED ON : பிப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காதல் ஒன்றும்

கசங்கிய காகிதம் அல்ல

குப்பையில் துாக்கி

எறிந்துவிட்டு போவதற்கு!

காதல் என்பது

ஒருநாள் நட்பு அல்ல

பேசிவிட்டு மனம் போன போக்கில்

பிரிந்து செல்வதற்கு!

காதல் ஒன்றும்

உணர்ச்சியற்ற பொம்மை அல்ல

தொட்டு பார்த்து

ரசித்து விட்டு

வந்த வழியே போவதற்கு!

காதல் ஒன்றும்

வியாபார பொருள் அல்ல

விற்பனை செய்து

தொழிலை பெருக்குவதற்கு!

காதல் என்பது

விளையாட்டு அல்ல

வெற்றி தோல்விகளை

உறுதி செய்வதற்கு!

காதல் எனப்படுவது

துாக்கத்தில் வரும் கனவு அல்ல

பொழுது விடிந்தால்

கலைந்து மறைவதற்கு!

காதல் ஒன்றும்

கற்பனை ஓவியமல்ல

வார்த்தைகளால் செதுக்கி

கவிதையை மட்டும் வடிப்பதற்கு!

காதல் புனிதமானது

காதல் சுகமானது

காதல் மனிதநேயம் மிக்கது

காதலை நேசிப்போம்

உயிர் கொடுப்போம்!



- மணியட்டிமூர்த்தி, கோவை. தொடர்புக்கு : 7708771321

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us