
ஆஸ்துமா நோய் உள்ளோர், மூச்சுவிட சிரமப்படுவர். அந்த சமயங்களில், ஒரு தாம்பாளத்தில் வெந்நீரை ஊற்றி, அதில் பாதங்களை அழுத்தி வைக்க, வெந்நீரின் சூடு உள்ளங்கால் மூலமாக மெல்ல உடலில் பரவி, மூச்சு விடுவதை சீராக்கும்.
* பெண்கள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டிய பழங்களில் முக்கியமானது, திராட்சை. மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், திராட்சை பழத்தை உண்பதால், ரத்த சோகை வராமல் தவிர்க்கலாம்
* உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும், வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயை காய வைத்து, அதில் சிறிது மிளகு துாள், கற்பூரம் போட்டு கலக்கி பூசலாம்; சுளுக்கு, 'மளுக்'கென்று விட்டு விடும்
* ஜலதோஷம் மற்றும் தலையில் கோர்த்துள்ள நீர் போக, சாம்பிராணி புகை போட்டு தலையை காய வைத்துக் கொள்வது போல், ஓமம், மஞ்சள் சிறிதளவு போட்டு புகையை மூக்கு, தொண்டையில் இழுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்
* அஜீரணம், அடிக்கடி தொண்டை வறட்சி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால், கேரட் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை பச்சையாக தினசரி வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால், உடனே பலன் தெரியும்
* சொறி, சிரங்கு உள்ளோர், கடல் நீரில் தொடர்ந்து சில நாட்கள் கழுவி வந்தால், அவை இருந்த இடம் தெரியாமல் போய் விடும்
* கம்பளிப் பூச்சி உடம்பில் பட்டு விட்டால், அரிப்பு ஏற்பட்டு, தடித்து விடும். இதற்கு, அந்த இடத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, சூடு பறக்க தேய்க்கலாம்.