sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (10)

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (10)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (10)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (10)


PUBLISHED ON : ஜூலை 27, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விமானத்தில் சிவாஜிக்கு வந்த, 'டாய்லெட் டவுட்!'

ஒ ரு வாட்ட சாட்டமான அமெரிக்க நர்ஸ் பரிசோதித்த போது, தன் முகத்தை சீரியசாக வைத்து, 'இந்த நர்ஸ் ஆம்பிளையா, பொம்பிளையா, டாக்டர்?' என, என்னிடம் கேட்டார், சிவாஜி.

இந்த கேள்வியை நான், சிவாஜியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. சிரிப்பு வந்தாலும் அடக்கியபடி, பதில் சொல்லாமல் இருந்தேன்.

ஆனால், அந்த நர்ஸ் என்னிடம், 'பேஷன்ட் என்ன சொல்கிறார்?' எனக் கேட்க, ஒரு கணம் திணறி விட்டேன்.

'நீங்க ரொம்ப அழகாக இருப்பதாக சொல்கிறார்...' என, கற்பனையாக பதில் சொல்லி சமாளித்தேன்.

இதைக்கேட்டதும் அந்த நர்சுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை, அவரது புன்னகை சொன்னது.

உ டை நேர்த்தி போலவே, கார் விஷயத்திலும், சிவாஜி மிகவும் நேர்த்தி.

கார் சுத்தமாய் துடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கார்கள் எல்லாமே தினமும் துடைக்கப்பட்டு பளிச்சென்று இருக்கும்.

ஒருமுறை, சிவாஜியின் அமெரிக்கவாழ் உறவினர் ஒருவர், ஒரு நிகழ்ச்சிக்கு, சிவாஜியை அழைத்து போக, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.

தன் ஊரிலிருந்து புறப்பட்டு, சில மணி நேரம் பயணம் செய்து, அவர் வந்திருந்தார். நீண்ட பயணத்தின் காரணமாக, அவர் கார் முழுதுவம் துாசி படிந்திருந்தது.

அதைப் பார்த்து, 'உன் காரில் நான் ஏற மாட்டேன். முதலில் அதை பளிச்சென்று சுத்தம் செய்து எடுத்து வா...' என, சொல்லி விட்டார், சிவாஜி.

அவர் ஏதேதோ விளக்கம் சொல்லி, சிவாஜியை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்; ஆனால், சிவாஜியிடம் எதுவும் எடுபடவில்லை.

அவர் அந்த காரை எடுத்து போய், கழுவி சுத்தம் செய்து வந்த பிறகே புறப்பட்டார், சிவாஜி.

நா ன் வசித்த கொலம்பஸ் நகரில், 'கொலம்பஸ் டெஸ்பாட்ச்' என, ஒரு தினசரி பத்திரிகை வரும். 1871ல் ஆரம்பிக்கப்பட்ட, மிக பழமையான நாளிதழ்.

சிவாஜி வந்திருந்த போது, அந்த பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு, 'இந்தியாவில் இருந்து புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் வந்திருக்கிறார். தென் மாநில சினிமாவின் மார்லன் பிராண்டோ என்று சொல்லலாம். அவரை பேட்டி காண, நான் ஏற்பாடு செய்கிறேன்...' என்றேன்.

சிவாஜியை பேட்டி காண, நேரம் வாங்கிக் கொடுத்தேன். இவர் தான், 'பங்க்ச்சுவாலிடி' மன்னன் ஆயிற்றே!

சொன்னதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே, நிருபரை சந்திக்க தயாராகி விட்டார்.

பேட்டிக்கான நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

சிவாஜியை பேட்டி காண்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட, அந்த பத்திரிகையின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிருபர் வந்து சேரவில்லை.

சிவாஜி குறுக்கும், நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நிருபர் வரக்காணோம்.

'அமெரிக்காவில் எல்லாருக்கும் நேரத்தின் அருமை தெரியும் என, நினைத்தேன். இந்த நிருபர் இப்படி பண்ணிவிட்டாரே... பேட்டியை, 'கேன்சல்' செய்து விடலாமா?' எனக் கேட்டார், சிவாஜி.

'இங்கே பொதுவாக எல்லாரும், சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவர். அப்படி வரமுடியாது போனால், அவர்களையும் மீறிய காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும்...' எனச் சொல்லி, அவரை சமாதானப்படுத்தினேன்.

ஒருவழியாக, அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார், அந்த நிருபர். வரும்போதே, 'முகவரியை கண்டுபிடிக்க ரொம்பவும் சிரமப்பட்டு விட்டேன். அதனால், தான் தாமதமாகி விட்டது. தயவு செய்து மன்னித்து விடுங்கள். ஐயாம் வெரி வெரி சாரி...' என, வருத்தம் தெரிவித்தார்.

பேட்டி துவங்கியது.

அந்த நிருபரது எல்லா கேள்விகளுக்கும், 'ஸ்டைல்' ஆன, அமெரிக்க உச்சரிப்பில், அழகான ஆங்கிலத்தில் பதில் சொல்லி அசத்தினார், சிவாஜி.

வண்ணப்படங்களோடு, 'கொலம்பஸ் டெஸ்பாட்ச்' தினசரியில், அரை பக்க அளவுக்கு, சிவாஜியின் பேட்டி சிறப்பாக வெளியானது.

அமெரிக்காவில் நீண்ட துார கார் பயணங்களை, சிவாஜி விரும்பினாலும், இந்தியாவில் ரயில் பயணங்களே அவர் விருப்பம். சென்னையிலிருந்து, தஞ்சாவூரில் உள்ள தன்னுடைய தோட்டத்துக்குப் போக வேண்டுமென்றால், பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்வார்.

'சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு வரவேண்டுமென்றால், பல மணிநேரம் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதே... விமானத்தில், 'பிசினஸ் கிளாஸ்' இருக்கைகள் சவுகரியமாக இருக்கும் என்றாலும், பல மணி நேரம் ஒரே இருக்கையில் உட்கார்ந்தும், சாய்ந்தும், படுத்துக் கொண்டும் பயணம் செய்வது, உங்களுக்கு சிரமமாக இல்லையா?' என, அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

அதற்கு அவர், நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பதிலை அளித்தார்.

'விமானத்தில் சீட்டில் உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் பயணம் செய்வது, எனக்கு கஷ்டமாக இல்லை. ஆனால், இவ்வளவு பெரிய ஆகாய விமானத்தில், 'டாய்லெட்'டை மட்டும் ஏன் ரொம்பவும் சின்னதாக வைத்திருக்கின்றனர்?

'உள்ளே போய் உட்காருவதும், எழுந்திருப்பதும் ரொம்பக் கஷ்டம். விமானத்துக்குள்ளே தான் நிறைய இடம் இருக்கிறதே. அந்த டாய்லெட்டை இன்னும் கொஞ்சம் சவுகரியமாக, பெரிசாக வைத்தால் தான் குறைந்தா போய் விடுவர்?' என்றார்.

ஒருநாள், கமலா அம்மாவுடன், என் அம்மா கோதை ஆச்சி மற்றும் தங்கை கிருஷ்ணா என, இரண்டு பேரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிவாஜி சற்று தள்ளி உட்கார்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கமலா அம்மாவிடம் ரொம்ப கேஷுவலாக, 'உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் யாரு?' எனக் கேட்டார், என் அம்மா.

கமலா அம்மா கொஞ்சம் கூடத் தயங்காமல், 'எம்.ஜி.ஆர்., தான்...' என, பதில் சொன்னார்.

கமலா அம்மாவின் இந்த பதிலை கேட்டு, சற்று தள்ளி உட்கார்ந்திருந்த சிவாஜி துணுக்குற்றார். தன் தலையைத் திருப்பி, கமலா அம்மாவைப் பார்த்தார்.

அடுத்து நடந்தது என்ன?

அது அடுத்த வாரம்.



தொடரும்

எஸ். சந்திரமவுலி







      Dinamalar
      Follow us