sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (16)

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (16)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (16)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (16)

1


PUBLISHED ON : செப் 07, 2025

Google News

PUBLISHED ON : செப் 07, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாஜிக்கு கார் ஓட்டிய ஜேம்ஸ்பாண்ட்!

அமெரிக்காவில் எங்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் கவனித்து கொள்வதற்கு ஒரு பெண்மணி இருந்தார். அவர் பெயர், டோரிஸ். அமெரிக்காவில், சிவாஜி எங்கள் வீட்டில் தங்கி இருந்த போதெல்லாம் மிகுந்த அக்கறையோடு அவரை கவனித்து கொண்டவர், அவர் தான்.

சிவாஜியின் தேவைகளை, உடனுக்குடன் நிறைவேற்றுவார். எத்தனை முறை காபி, டீ கேட்டாலும் உடனே போட்டு கொடுப்பார். அவரது வேலை நேர்த்தி, சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். டோரிஸை அடிக்கடி பாராட்டுவார்; நன்றி சொல்வார்.

பார்க்க பளிச்சென்று தோற்றம் கொண்ட அமெரிக்கப் பெண்மணி, டோரிஸ். மிகச்சுத்தமாக ஆடைகளை அணிவார். எப்போதும் அவர் முகத்தில் புன்னகை இருக்கும். எதற்கும் அலுத்துக் கொள்ள மாட்டார். எப்போதுமே கலகலப்பாக இருப்பார்.

காலையில் அவர் வீட்டுக்குள் வந்ததுமே, வீட்டில் ஒரு புத்துணர்ச்சி பரவி விடும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக ஏதாவது பணிகள் செய்து கொண்டே இருப்பார்.

இந்த பெண்ணுக்கு தான், டோரிஸ்டே என்ற பெயரை சூட்டினார், சிவாஜி. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

டோ ரிஸ்டே, 1950 - 60ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான, ஒரு ஹாலிவுட் நடிகை. நடிப்புத் தவிர, நல்ல பாடகியும் கூட. நடிப்புக்காகவும், இசைக்காகவும் பல விருதுகள் பெற்றவர். அமெரிக்கர்களுக்கு, டோரிஸ்டேயை ரொம்பப் பிடிக்கும். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 'டிவி' ஷோக்கள் நடத்தினார்.

சரி, எங்கள் வீட்டு டோரிஸுக்கும், ஹாலிவுட் நட்சத்திரம், டோரிஸ்டேவுக்கும் என்ன தொடர்பு? டோரிஸை பார்த்ததும், சிவாஜிக்கு ஹாலிவுட் நட்சத்திரம் டோரிஸ் டேயை நினைவுப்படுத்தி இருக்கிறது. அதனால், இந்த டோரிஸை சிவாஜி, டோரிஸ்டே என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்.

இதில், எங்கள் வீட்டு டோரிஸுக்கு பெரும் மகிழ்ச்சி. இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர், தன்னை ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் போல இருப்பதாகச் சொல்வதும், அவர் பெயரிலேயே தன்னை அழைப்பதும் அவருக்கு பெருமையாக இருந்தது.

டோரிஸ்டே என, சிவாஜி அவரைக் கூப்பிடும் போது, அவர் முகமெல்லாம் மகிழ்ச்சியும், பெருமிதமும் படரும்.

டோரிஸ் அமெரிக்கப் பெண்மணியாக இருந்த போதிலும், எங்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, இந்திய உணவுகளை சமைப்பதற்கு கற்றுக் கொண்டார். நாளடைவில் நம்மூர் சமையல் போலவே அவருக்கு கைப்பக்குவம் வந்து விட்டது.

எங்கள் வீட்டில் சிவாஜி தங்கியிருந்த போது, அவருக்கு இட்லி உப்புமா, சேமியா உப்புமா மற்றும் கத்தரிக்காய் கொத்சு எல்லாம் செய்து கொடுத்து அசத்தி விட்டார். அவர் தோசை சுட்டால், நன்றாக மொறுமொறுவென்று, சூடும், சுவையுமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, 'டைஸ்டு பொடேடோ' என, ஒரு ஐட்டம் செய்வார், டோரிஸ். அதுவும், சிவாஜிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

சாப்பிட வரும்போதே, 'என்ன டோரிஸ்டே! டைஸ்டு பொடேடோ ரெடியா?' என, உரிமையோடு கேட்டுக் கொண்டே சாப்பிட உட்காருவார்.

மிகவும் சுவையாக காபி போடுவார், டோரிஸ்.

'டோரிஸ்டே போட்டால் காபிக்குக் கூட தனியா ஒரு மணம் வந்திடுது...' என, காபி அருந்தும் போதெல்லாம் பாராட்டுக்களை வழங்குவார், சிவாஜி.

ஒருமுறை, டோரிஸ் காபி கொடுக்கும் போது, கமலா அம்மாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, 'எங்க வீட்டுல, காபின்னு சொல்லி கொடுத்தால் தான், அது காபின்னு தெரியும்...' என, சிரித்தபடி கிண்டலாகச் சொன்னார், சிவாஜி.

சிவாஜியின் நகைச்சுவை உணர்வுக்கு இது சாட்சி.

'உங்களுக்கு சீரியஸ் மனிதர் என்ற, 'இமேஜ்' தான் இருக்கு. உங்க கூட பழகும் போது தான், உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு இருக்குன்னு தெரியுது. கிண்டல் எல்லாம் ரொம்ப சரளமா வருது. இது எங்களுக்கெல்லாம் ரொம்ப புதுசு. நாங்க பார்க்காத, எங்களுக்கு தெரியாத சிவாஜியா நீங்க இருக்கீங்க...' என்றேன் அவரிடம்.

என்னுடைய ஆச்சரியத்துக்கு சிவாஜியிடமிருந்து சட்டென்று பதில் வந்தது...

'இந்த டைரக்டர் பயலுவ இருக்காங்களே... அவங்க எல்லாம் சேர்ந்து, 'செட்'டுல என்னை நிக்க வெச்சு, 'லைட்'டைப் போட்டு, பெரிய பெரிய வசனங்களைக் கொடுத்து பேச சொல்லி, சீரியசா நடிக்க வெச்சு, என்னை ஒரு சீரியசான நடிகனா ஆக்கி விட்டுட்டாங்க. நெஜத்துல நான் கலகலப்பான ஜாலியான ஆளு தான்...' என்றார்.

எ ங்கள் வீட்டு டோரிஸுக்கு, ஹாலிவுட் நடிகையின் பெயரை வைத்தது போல், எங்கள் டிரைவருக்கும் ஜேம்ஸ் பாண்ட் என, பெயர் வைத்தார், சிவாஜி.

அவருடைய உண்மையான பெயர், ஹெரால்; அமெரிக்கர். உயரமாக, கம்பீரமாக இருப்பார். கோட் - சூட் அணிந்திருப்பார். சிவாஜி முதல் முறையாக அவரை பார்த்தவுடன், 'இவன் என்ன ஜேம்ஸ்பாண்ட் போல பர்சனாலிட்டியா இருக்கானே...' என்றார்.

அப்போதிருந்தே அவரை, 'ஜேம்ஸ் பாண்ட்' என்றே கூப்பிடத் துவங்கி விட்டார். உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் பெயரை சொல்லி, தன்னை சிவாஜி அழைக்கிறாரே என, எங்கள் டிரைவர் ஹெராலுக்கும் பெருமை. சிவாஜி, அமெரிக்காவில் இருந்தபோது இந்த ஜேம்ஸ்பாண்ட் தான் டிரைவர்.

ஜேம்ஸ்பாண்டுடன் அமெரிக்கன் உச்சரிப்பிலேயே ஸ்டைலாக ஆங்கிலத்தில் உரையாடுவார், சிவாஜி. ஒருநாள் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலில் என்னைப் பற்றியும் பேசி இருப்பர் போல.

அப்போது, என்னை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார், என் டிரைவர். அமெரிக்காவில் மருத்துவ உலகில் எனக்கிருக்கும் அங்கீகாரம், என்னுடைய சொத்துக்கள், விதவிதமான கார்கள் என, என் அமெரிக்க வாழ்க்கையை பெருமையாக சிவாஜியிடம் சொல்லியிருக்கிறார். அத்துடன் நிறுத்தாமல் சிவாஜியைப் பற்றிக் கேட்டிருக்கிறார். அவர் கேட்ட கேள்வி இதுதான்.

'உங்கள் ஊரில் நீங்கள் எப்படி? வசதியானவரா? சொத்துக்கள்லாம் இருக்கிறதா?'

அந்த கேள்விக்கு அப்போது பதிலளிக்கவில்லை, சிவாஜி. தன்னைப் பற்றி அவனிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், என்னிடம் சொன்னார்.

'உங்க டிரைவரை ஒரு தடவை தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போய், நம்ம சூரக்கோட்டை தோட்டத்தைக் காட்டணும்! அப்போ தான் நான் யாருன்னு அவனுக்குப் புரியும்...' என்றார்.

நான் சிரித்துக் கொண்டே, 'இந்தியாவில் உங்களுக்கு இருக்கும் புகழ், செல்வாக்கு பற்றி அவருக்கு தெரியாது. அதனால் அப்படி கேட்டிருப்பார்...' என்றேன்.

ஒ ருமுறை சிவாஜியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவருடைய நடிப்பு குறித்து பேச்சு வந்தது.

'உங்களுடைய உணர்ச்சிபூர்வமான நடிப்பை சிலர், 'ஓவர்ஆக்டிங்'ன்னு சொல்லும் போது, எனக்கு வருத்தமா இருக்கும். உங்க நடிப்பை புரியாதவர்களாக இருக்காங்களேன்னு நினைப்பேன்...' என்றேன், சிவாஜியிடம்.

அதற்கு, சிவாஜி விளக்கமாக ஒரு பதிலைச் சொன்னார்.

அந்த பதிலைத் தெரிந்துகொள்ள ஒருவாரம் காத்திருங்க... ப்ளீஸ்!



- தொடரும்

எஸ். சந்திரமவுலி






      Dinamalar
      Follow us