
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆகஸ்ட் 4, 1821 - அண்டார்டிகா பயணத்தை முதன் முறையாக மேற்கொண்டது, ரஷ்யா.
* 1929 - பிரபல ஹிந்திப்பட நடிகர் மற்றும் பாடகர் கிஷோர் குமார் பிறந்த நாள்.
* 1956 - இந்தியாவின், முதல் அணு ஆராய்ச்சி உலை துவங்கப்பட்டது.
* 1961 - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, பராக் ஒபாமா பிறந்த நாள்.
* 1962 - நெல்சன் மண்டேலா, தென் ஆப்ரிக்காவின் காவல் துறையால் சிறை பிடிக்கப்பட்டார்.
* 1967 - உலகின் மிக நீளமான, நாகார்ஜுனா சாகர் அணை கட்டப்பட்டது.
* 1972 - உகாண்டா ராணுவ தலைவர் இடி அமின், அங்கு வாழ்ந்து வந்த, 50 ஆயிரம் இந்தியர்களும், 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, உத்தரவிட்டார்.
*1998 - இலங்கையில், அவசர சட்டத்தை அந்த நாட்டில் கொண்டு வந்தார், அப்போதைய ஜனாதிபதி, சந்திரிகா குமாரதுங்கா.