
நவ., 3, 1618 - அவுரங்கசீப் பிறந்த நாள்.
* 1838 - 'பாம்பே டைம்ஸ்' இதழ் முதன் முதலில் வெளிவந்தது. 1861ல், அதன் பின், 'டைம்ஸ் ஆப் இந்தியா' என, பெயர் மாற்றம் பெற்றது.
* 1911 - ஏ.கே.செட்டியார் பிறந்த நாள். தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி.
* 1933 - நோபல் பரிசு பெற்றவர் மற்றும் பொருளியலாளரான, அமர்த்தியா சென் பிறந்த நாள்.
* 1935 - தென் மாநில திரைப்பட பாடகி, ஜிக்கி பிறந்த நாள்.
* 1957 - சோவியத் யூனியன், 'ஸ்புட்னிக்--2'ஐ விண்ணில் ஏவியது. இதில், லைகா என்ற நாயும் பயணித்தது. பூமியை சுற்றி வந்த முதல் உயிரினம் இது தான்.
* 1963 - ஜெய்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், அதன் தலைவராக, காமராஜர் தேர்வு செய்யப்பட்டார்.
* 1968 - திராவிட நாடு, தனி நாடு கோரிக்கையை கைவிட்டதாக அறிவித்தது, தி.மு.க., செயற்குழு.
* 1973 - மரைனர் - 10 என்ற விண்கலத்தை, புதன் கிரகத்தை நோக்கி அமெரிக்கா அனுப்பியது. அந்த கோளை அடைந்த முதல் விண்கலம் என பெயர் பெற்றது.
* 1998 - சீன பெருஞ்சுவரின் மற்றொரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
* 2014 - அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது.