தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - பொட்டுக்கடலை!

நம்மிடமே இருக்கு மருந்து! - பொட்டுக்கடலை!

நம்மிடமே இருக்கு மருந்து! - பொட்டுக்கடலை!


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலோரிகள் குறைவாக இருப்பதுடன், அதிக ஊட்டச்சத்து நிறைந்தது, பொட்டுக்கடலை. எனவே, வறுத்த பொட்டுக்கடலையை, பிரபலமான சிற்றுண்டி உணவாக வைத்துள்ளனர், வட மாநிலத்தவர்கள்.

ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள இவை, செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நீண்ட நேரம் உற்சாகமாக உணர வைக்கும்.

வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள மாங்கனீசு, போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள், இதய நோய் அபாயத்தை தடுக்கிறது. மேலும், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

உடலின் குளுக்கோஸ் ஏற்ற, இறக்கங்களை சரி செய்வதோடு, சர்க்கரை செயலிழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

எலும்புக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம் மற்றும் மூட்டு வலி ஏற்படுவதையும் தடுக்கிறது.

இதில், செலினியம் அதிகளவில் காணப்படுவதால், புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

உடல் சீராக இயங்க, நரம்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எனவே, வறுத்த பொட்டுக்கடலையை சாப்பிட்டு வந்தால், இதிலுள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள், நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை குறைக்கிறது.

பொட்டுக்கடலையில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுவதுடன், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது.

- வி. பரணிதா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us