sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு திராட்சை விதை!

/

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு திராட்சை விதை!

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு திராட்சை விதை!

நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு திராட்சை விதை!


PUBLISHED ON : டிச 29, 2024

Google News

PUBLISHED ON : டிச 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பு திராட்சை என்றவுடன், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட, அதன் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

கருப்பு திராட்சை விதையில், புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இது, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகளை நீக்குகிறது.

மூல நோயால் ஏற்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னையை குணமாக்குகிறது.

சிறுநீரக செயல்பாட்டிலுள்ள குறைகளை சரி செய்கிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது.

பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும், புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே, திராட்சைப் பழத்துடன் விதைகளை சேர்த்து உண்பது, நல்ல பலனை தரும்.

உடல் வளர்ச்சியில் குறைபாடு, உடல் பலகீனம், தோல் வியாதி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளோர், திராட்சை விதை தொடர்ந்து சாப்பிட்டு வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

தொகுப்பு : ஏ.எஸ்.கோவிந்தராஜன்






      Dinamalar
      Follow us