/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - சேப்பங்கிழங்கு இலை!
/
நம்மிடமே இருக்கு மருந்து - சேப்பங்கிழங்கு இலை!
PUBLISHED ON : ஜன 26, 2025

சேப்பங்கிழங்கு மற்றும் அதன் இலை அதிக பலன் தரக்கூடியவை. இந்த இலை பார்ப்பதற்கு இதய வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். சமைத்து சாப்பிட, ருசி அபாரமாக இருக்கும்.
இந்த இலையில், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும், குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும், இந்த இலை துணை புரிகிறது.
வழக்கமாக கீரைகள் என்றாலே கண்களுக்கு வலிமை தரக்கூடியது. அதிலும், இந்த கிழங்கின் கீரை, கண் ஆரோக்கியத்தை காக்கிறது; கண் புரைகளை சரியாக்குகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளோர், இந்த இலையை உணவில் சேர்த்து கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
இந்த இலைகள், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக உதவுகிறது. சேப்பங்கிழங்கு இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது.
இந்த இலைச்சாறு, நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்று சொல்லலாம். காரணம், சேப்பங்கிழங்கு இலையின் சாறை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், அதிகரிப்பதையும் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், இந்த கீரையை தாராளமாக பயன்படுத்தலாம். காரணம், ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. இதை தவறாமல் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீர்ந்து குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், சேப்பங்கிழங்கு இலைகளை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும்.
சேப்பங்கிழங்கு இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேகவைத்த இலைகளை உணவில் சேர்த்து சமைக்கலாம்.
பாம்புக்கடி, தேள் கடி போன்றவற்றின் விஷத்தை முறிக்கும் தன்மை, இந்த இலைக்கு உண்டு.
இதில், வைட்டமின் பி உள்ளதால், நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
பச்சையாக இலையை உண்ணக் கூடாது. வட மாநிலங்களிலும், கேரளாவிலும், இந்த இலையை கழுவி சுத்தம் செய்து, தேங்காய்ப்பாலில் வேக வைத்து, சூப் போல செய்து சாப்பிடுவர்.
வி.சி.கிருஷ்ண ரத்னம்