sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து: தக்காளி!

/

நம்மிடமே இருக்கு மருந்து: தக்காளி!

நம்மிடமே இருக்கு மருந்து: தக்காளி!

நம்மிடமே இருக்கு மருந்து: தக்காளி!


PUBLISHED ON : பிப் 16, 2025

Google News

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழைகளின் ஆப்பிள் எனப்படும், தக்காளியின் பிறப்பிடம், அயர்லாந்து நாடு. வைட்டமின் ஏ மற்றும் செம்பு சத்து அதிகம் உள்ள பழம். மேலும், புரதம், கொழுப்பு சத்து, கால்சியம், இரும்புச்சத்து, சல்பர், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, பி3, சி, டி மற்றும் மாவுச்சத்தும் கொண்டது.

'இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் தக்காளிகளில், 'பிளாவனாயிட்ஸ்' என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. அந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், இதயநோயை குறைப்பதிலும், சில வகை புற்றுநோய்க்கு எதிராகவும் இயங்கும் ஆற்றல் பெற்றவை...' என, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

தக்காளி ஜூஸ் குடித்தால், நம் தினசரி கால்சியம் தேவையில், 40 சதவீதம் கிடைக்கும். இது, களைப்பை போக்கும் சிறந்த பானமாக விளங்குகிறது. கர்ப்பமான பெண்களின் ஆரம்ப கால வாந்தியை தடுக்கிறது. அஜீரணத்தை போக்குகிறது. தக்காளி பழச்சாறு அடிக்கடி எடுத்துக் கொண்டால், வயிற்றுப் புற்றுநோயை தவிர்க்கலாம்.

வயதானவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள, ஆஸ்பிரின் மாத்திரை சிபாரிசு செய்வது வழக்கம். ஆனால், அதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக தினசரி, தக்காளி பழத்தை சாப்பிடுவது, நல்ல பலனைத் தரும்.

தக்காளி பழத்தில் நிறமற்ற மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான விதைகளில், ஆஸ்பிரினில் உள்ளதை போன்ற, ரத்த ஓட்டத்தை சீராக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தக்காளி பழத்தில் உள்ள, 'லைகோபின்' என்ற வேதிப்பொருள், பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இந்த வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், ரத்தக் கட்டிகள் உருவாகாமலும் தடுக்கிறது.

தக்காளி சாறு பருகுவதால், சிகரெட் மற்றும் வாகனப் புகை போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.

குளிக்கும் நீரில் தக்காளி சாறு கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் போகும். தக்காளி சாறுடன், தேன் கலந்து சாப்பிட, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். தக்காளியில் உள்ள அமிலத்தன்மை, குடலில் வாயுவை உற்பத்தி செய்ய விடாமல் தடுக்கும். அதனால் மலச்சிக்கல் தீரும்; வாய்ப்புண், சுவாசக் கோளாறுகள் மற்றும் உடலில் உள்ள ஊளைச் சதையை குறைக்கும்.

தக்காளியை வேக வைத்து, அதன் சதைப் பகுதியை கட்டிகள் மற்றும் வீக்கங்கள் மீது கட்டி வர, அவை பழுத்து, சீழ் வெளியேறி, புண்கள் விரைவில் ஆறும். இரவு துாங்கும் முன், தக்காளி சாறை பருக்கள் மீது பூசிவர, பருக்கள் விரைவில் மறையும்.

அடிக்கடி உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளும் பெண்களுக்கு, ஆஸ்துமா வரும் வாய்ப்பு தடுக்கப்படும். தக்காளியில் இவ்வளவு சத்துக்கள் நிறைந்திருந்தாலும், ஒரு நாளைக்கு, 200 கிராமிற்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

- கோ. மகிழினியாள்






      Dinamalar
      Follow us