தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: சாத்துகுடி!

நம்மிடமே இருக்கு மருந்து: சாத்துகுடி!

நம்மிடமே இருக்கு மருந்து: சாத்துகுடி!


PUBLISHED ON : அக் 26, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் போது, நாம் வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்கு தான் முதலிடம். அந் த அளவுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டது, சாத்துக்குடி.

செரிமான மண்டலத்தை துாண்டக் கூடிய, 'பிளாவனாய்டு' என்ற வேதிப்பொருள், இந்த பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதனால், வயிறு மற்றும் செரிமானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, சாத்துக்குடி சிறந்தது.

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும், சாத்துக்குடிக்கு உண்டு. சாத்துக்குடியில், வைட்டமின், 'சி' நிறைவாக உள்ளதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சாத்துக்குடியில் உள்ள, 'லெமனாய்டஸ்' என்ற வேதிப்பொருள், பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் நம் உடலை காப்பாற்றுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

வெதுவெதுப்பான நீரில், சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, உடல் எடை நிச்சயமாக குறைந்து விடும்.

கொழுப்பை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சாத்துக்குடி சிறந்தது.

சாத்துக்குடியில் உள்ள, வைட்டமின், 'சி' சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, நம் சருமத்துக்கு இயற்கை பொலிவைத் தருகிறது. தோல் சுருக்கம் போன்ற சரும பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

சிறுநீரக பாதிப்பு உள்ளோர், சாத்துக்குடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

- சி.ஆர்.ஹரிஹரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us