தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: இஞ்சி!

நம்மிடமே இருக்கு மருந்து: இஞ்சி!

நம்மிடமே இருக்கு மருந்து: இஞ்சி!


PUBLISHED ON : நவ 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருந்தாலும், அதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றி காண்போம்...

* தினமும் இஞ்சியின் சாற்றை, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாவதுடன், விரைவாக உடலின் எடையைக் குறைக்கலாம்

* வாரம் இரண்டு முறை, இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் மற்றும் சோர்வு பிரச்னைகள் குணமாகும்

* வாரம் ஒரு முறை, இஞ்சியை சுட்டு சாப்பிட, பித்தம் மற்றும் கபம் நோய்கள் விரைவாக குணமாகும். அதேபோல், இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதக் கோளாறுகள் நீங்கி, உடலில் பலம் உண்டாகும்

* இஞ்சியை புதினா இலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை குணமாகும்

* காலையில் இஞ்சி சாற்றில், சிறிதளவு உப்பு கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்

* இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என, இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குணமாகும்.

* இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்

* இஞ்சி சாற்றில், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உணர்வை ஏற்படுத்தும். அதேபோல் இஞ்சி, மிளகு ஆகிய இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வந்தால், அஜீரணம் ஏற்படாது

* இஞ்சியை வதக்கி, அதில் தேன் மற்றும் நீர் விட்டு, கொதிக்க வைத்து, காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து, அதனுடன் துளசி இலையின் சாறை சேர்த்து, ஒரு வாரம் சாப்பிட்டால், வாய்வு தொல்லை குணமாகும்

* இஞ்சி சாற்றில் தேன் கலந்து, தினமும் காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us