தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அர்ச்சனை!

அர்ச்சனை!

அர்ச்சனை!


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

செப்டம்பர் 20, 2026 வாரமலர் இதழில், இ.உ.இ., பகுதியில் வெளியான, திருச்சி வாசகர், ஆ.வீரப்பன் எழுதிய, ‘பிரச்னையை உருவாக்கும் பரிசு வேண்டாமே!’ முதல் பரிசு கடிதம் படித்தேன். பரிசுப் பொருள் முக்கியமில்லை. பரிசு வாங்குவதால், பரிசு பெறுபவருக்கு, அதனால், பிரச்னை வந்து விடக்கூடாது என்பதில் கவனம் வேண்டும் என்ற அருமையான கருத்தை வெளிப்படுத்தியிருந்தது.

– எம்.மிக்கேல்ராஜ், சாத்துார்.

விசேஷம் இது வித்தியாசம் பகுதியில், ‘இனிமையாக பேசுவோம்!’ பக்தி கட்டுரை படித்தேன். அதுக்க நவமியின் விளக்கத்தையும், மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசுவதன் விளைவுகளையும், துர்க்கையின் திருவடியை பணிந்தால், ஏற்படும் நன்மையையும் கட்டுரையில் அழகாக விவரித்திருந்தார், தி. செல்லப்பா.

– கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

‘அன்புடன் அந்தரங்கம்!’ பகுதியில், 26 வயது பெண்ணுக்கு, சிறப்பான முறையில் வழிகாட்டியிருந்தார், சகுந்தலா கோபிநாத்.

– ப.செல்வநாதன், கடலுார்.

ஜோல்னாபையனின், ‘அசைவ புட்டு வேண்டுமா?’ மற்றும் திரைப்பட பின்னணி பாடகி, சித்ராவுக்கு, ‘எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு!’ ஆகிய இரண்டு துணுக்குகளும் வியப்பில் ஆழ்த்தின.

– எஸ்.கே.ஸ்ரீதீப்ஷிகா, மதுரை.

கவிதைச்சோலை பகுதியில், சென்னை, கே.எஸ்.மணி எழுதிய, ‘புலம்பல் ஓயட்டும்!’ கவிதை, முதியவர்களுக்கு வரப்பிரசாதம். முதுமையை கைகுலுக்கி வரவேற்று, இறப்பை கட்டியணைக்கச் சொல்லும், அவரது அணுகுமுறை அற்புதம்.

– டி.செல்வன், நெல்லையப்பபுரம், தென்காசி.

‘திண்ணை!’ பகுதியில் இடம்பெற்ற, ஸ்டாலின் மற்றும் வாரியார் பற்றிய இரு தகவல்களும் வெகு சுவாரஸ்யமாக இருந்தன. தொகுத்து வழங்கிய, நடுத்தெரு நாராயணனுக்கு பாராட்டுக்கள்.

– சி.விஜயகுமார், கோவை.

அந்துமணியின் பா.கே.ப., பகுதியில், எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும், ‘ஜென்–சி’ தலைமுறையினர் பற்றியும், ஓய்வுபெற்றவரின், நுாற்றுக்கு நுாறு உண்மையான அவஸ்தைப் பற்றிய தகவலும் சுவாரஸ்யமாக இருந்தன.

– யு.சொக்கலிங்கம், மதுரை.

ஆர்னிகா நாசர் எழுதிய, ‘நட்சத்திர துாளியில் ஊஞ்சலாடு!’ சிறுகதை வாசித்தேன். பணத்துக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் மயங்காமல், மருத்துவ சேவையே பெரிது, காதல் கணவனுடனான வாழ்க்கையே முறையானது என, தீர்மானித்து கோட்டீஸ்வர கிழவனை நிராகரித்த செவிலியர், மஞ்சுளாவின் முடிவு போற்றத்தக்கது.

– எஸ்.தேவராஜ், காஞ்சிபுரம்.

‘அந்துமணி பதில்கள்!’ பகுதியில், ராமநாதபுரம், கி.பாலமுருகனின் காவலர்களின் பணிச்சுமை குறித்த கேள்விக்கு, அந்துமணியின் பதில், காலத்திற்கு ஏற்றதாகவும், புதிய முதல்வரின் நிர்வாகத் திறனுக்கான ஒரு நல்ல ஆலோசனையாகவும் அமைந்தது.

– எம்.பாக்கியலட்சுமி, புதுச்சேரி.

வாசகர் பம்பர் பரிசு ரூ.1500

வாரமலர் இதழில் வெளியான, தமாஷ்கள் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக, சென்னை வாசகி, கே.ஆர்.பத்மாவின் மணப்பெண்ணுக்கு இருந்த, ‘ப்ரசன்ஸ் ஆப் மைன்ட்’ நகைச்சுவையை ரசித்து, மகிழ்ந்தோம்.

– ஜி.மஞ்சரி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us