
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் என்பதற்கு இனிமை என்று பொருள். இரு பொருள் தரும் ஒரே சொல்லைப் பயன்படுத்திப் பேசும் போது, பேசுபவருக்கும், கேட்பவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம்.
நான் ஒருமுறை மும்பை பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். நான் சென்று சேர வேண்டிய இடத்திற்கு, தானா என்று பெயர்.
அங்கு வந்த தமிழ் பேசும் அன்பரிடம், 'இந்த பஸ் தானா போகுமா...' என்று கேட்டேன்.
அதற்கு, 'எந்த பஸ்சும் தானா போவாது. டிரைவர் ஓட்டினால் தான் போகும்...' என்றார், அவர்.
- புலவர் மா.ராமலிங்கம்