
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எதிலும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்...' என, பெரியோர் மற்றும் அனுபவசாலிகள் கூறுவர்.
ஒன்றாம் வகுப்பு மாணவனின் சேட்டை தாங்காமல், கொம்பை கையில் எடுத்தார், ஆசிரியர்.
உடனே, 'ஆ... ஐயோ, ஐய்யய்யோ...' என அலறினான், மாணவன்.
'ஏன்டா, நான் இன்னும் உன்னை அடிக்கவே இல்லை. அதுக்குள்ள ஏன் இப்படி அலர்ற?' என்றார், ஆசிரியர்.
'நீங்க தானே சார், போன வகுப்புல எதிலும் முன் ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு சொன்னீங்க...' என்றான்.
— புலவர் மா.ராமலிங்கம்