
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம், கொச்சியில் ஆண்டுதோறும் நடக்கும், 'கார்னிவெல்' விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பல பல வேடங்களில், ஆடி, பாடி ஊர்வலமாக செல்லும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். கேரளாவில் வழக்கமாக ஊர்வலங்கள் நடக்கும் போது, யானை கட்டாயம் இருக்கும். ஆனால். யானைகளை மக்கள் கூடும் இடங்களில் அழைத்து வர தடை விதித்துள்ளது. நீதிமன்றம்.
படத்தில், ஊர்வலத்தில் வருவது நிஜ யானை அல்ல. இது, ரோபோ யானை; நிஜ யானை போல அசைந்து செல்லும். இதை பொம்மை என கூற முடியாது. அந்தளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது.
கேரளாவில் கடை திறப்புவிழா நடைபெறும்போது, யானைகளும், செண்டைமேளமும் கட்டாயம் இருக்கும். இப்போது இதுபோன்ற விழாக்களுக்கும், ரோபோ யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜோல்னாபையன்