
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தக்காளி சூப் செய்யும் போது, ஒரு சிறு துண்டு பீட்ரூட்டை வேக வைத்து சேர்க்கலாம். இதனால், சூப் நல்ல நிறமாக இருக்கும்
* காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினீகர் கலந்த குளிர்ந்த நீரில், சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்
* கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன், வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி, ஊற வைத்த கடலைப் பருப்போடு நன்கு கலந்து கொள்ளவும். தேவையெனில், இதோடு தோசை மிளகாய் பொடியையும் கலந்து கொள்ளுங்கள். தோசைக்கல்லில், தோசை மாவை பருமனாக ஊற்றி, இந்த கலவையை மேலாகத் துாவி எண்ணெய் விட்டு வார்த்தால் சுவையோ சுவை
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை தயாரிக்கும் போது, பொட்டுக்கடலையை வறுத்து கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.