sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சீனாம்பிகையைத் தெரியுமா?

/

சீனாம்பிகையைத் தெரியுமா?

சீனாம்பிகையைத் தெரியுமா?

சீனாம்பிகையைத் தெரியுமா?


PUBLISHED ON : டிச 24, 2023

Google News

PUBLISHED ON : டிச 24, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச., 27 ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாத, திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜர் தரிசனம் சிறப்பானது.

சிவபெருமான், நடனமாடும் போது, நடராஜர் என சிறப்புப் பெயர் பெறுகிறார். நடனக் கலையின் ராஜா, அவர். அவர் நடனமிடும் சபைகள் ஐந்து. அதில் முதன்மையானது, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலிலுள்ள ரத்தின சபை.

நடராஜர் அருகிலுள்ள சிவகாமி அம்மையை, இங்கு சீனாம்பிகை என்கின்றனர். இந்தக் கோவிலில் பல விசேஷ தகவல்கள் புதைந்து கிடக்கின்றன.

காரைக்கால் அம்மையாருக்கு, சிவனின், திருநடனத்தைக் காண்பதில் அலாதி இன்பம். இதற்காக கைலாயத்துக்கே புறப்பட்டு விட்டார், அந்தப் பெண்மணி. கைலாய மலையில் கால் வைப்பது பாவம் என கருதியவர், தலையை ஊன்றி மலையேறினார்.

அவரது பக்தியைப் பாராட்டிய சிவன், 'அம்மா, உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார்.

'நடராஜப் பெருமானே, எனக்கு பிறப்பில்லாத நிலை வேண்டும். பிறந்தால், உன் திருநடனத்தை என்றும் காணும் பாக்கியம் வேண்டும்...' என்றார், அம்மையார்.

சிவனும், அவரது கோரிக்கையை ஏற்று, 'திருவாலங்காடு சென்று, என் நடனத்தை தினமும் காணலாம்...' என்றார்.

அம்மையார், மீண்டும் தலையூன்றி திருவாலங்காடு வந்து, நடராஜரின் திருநடனத்தை காணும் அற்புத தரிசனத்தை இங்கு காணலாம்.

கைலாயத்துக்கு வந்தவரை, திருவாலங்காட்டுக்கு செல்லும்படி, சிவனே சொல்லியுள்ளதைப் பார்த்தால், சிதம்பர ரகசியம் போல, இதை ஆலங்காட்டு ரகசியம் எனலாம்.

இங்கே இன்னும் ஒரு விசேஷம்...

பெருமாள் கோவில்களில் தான் தீர்த்தம் கொடுப்பர். திருவாலங்காடு சிவாலயம் என்றாலும், இங்கும் தீர்த்தம் தரப்படுவது விசேஷம்.

ஒருசமயம், ஊர்த்துவ தாண்டவம் ஆடினார், நடராஜர். இதன் உக்கிரத்தை தேவர்களால் கூட தாங்க முடியவில்லை. உஷ்ணத்தால், பாதிக்கப்பட்ட அவர்கள், மயக்க நிலைக்குச் சென்று விட்டனர். அவர்களின் துன்பம் கண்ட சிவன், தன் தலையிலிருந்த கங்கை நீரை தெளித்து அவர்களை எழுப்பினார்.

இதனடிப்படையில், இங்குள்ள நடராஜர் சன்னிதியில், தீர்த்தம் தருகின்றனர்.

இன்னொரு தகவல்...

பார்வதி தேவி, நடராஜர் அருகில் இருக்கும்போது, சிவகாமி என்று பெயர் பெறுகிறாள். ஆனால், திருவாலங்காட்டில் இவளது பெயர் சீனாம்பிகை. சீனம் என்ற சொல்லுக்கு, 'எளிதில் மற்றவர்களை வசப்படுத்துதல்' என, பொருள்.

நடராஜரின் திருநடனத்திற்கு இவள் வசப்பட்டு, ஆச்சரியப்பட்டு நிற்பதால், இந்த அம்பாளை சீனாம்பிகை என்கின்றனர். இதற்கேற்றாற் போல், நடராஜரின் நடனத்தைக் கண்டு ஆச்சரியப்படுவது போல, கன்னத்தில் கை வைக்க முயலும் பாவனையில் இவளது சிலை உள்ளது, விசேஷம்.

பல விசேஷங்களை உள்ளடக்கிய இந்தக் கோவில், திருவள்ளூர்- - அரக்கோணம் வழியில், 16 கி.மீ., துாரத்தில் உள்ளது.

- தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us