
திருவாதிரை களி!
தேவையான பொருட்கள்: அரிசி, பொடித்த வெல்லம் - தலா 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்துாள் - சிறிதளவு, முந்திரி பருப்பு - 20, தேங்காய்த் துருவல் - ஒரு கப், துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: அரிசியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு உடைத்துக் கொள்ளவும். உடைத்த அரிசி ஒரு பங்கு என்றால், இரண்டு பங்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இதில் அரிசியைத் துாவி, நன்றாகக் கிளறி, பாத்திரத்தை மூடவும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டி, கெட்டியாக பாகு காய்ச்சவும். தண்ணீரில் சிறிது பாகை ஊற்றினால் உருட்ட வரும். இதுதான் சரியான பதம். வெந்த களியில் பாகை ஊற்றி நன்றாகக் கிளறவும்.
நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துப் போடவும். துவரம் பருப்பை குழையவிடாமல் அரை வேக்காடு பதத்திற்கு வேக வைத்து களியுடன் சேர்க்கவும். பின்னர், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் துாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.